ருசியான பீர்க்கங்காய் பால் கூட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்ட சுவை அருமையாக இருக்கும் நீங்களும் ஒரு முறை செஞ்சி பாருங்க!

- Advertisement -

பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதை ஒரு சிலர் மட்டுமே அவர்களது உணவில் பெரும்பாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் ஒரு சில அறிந்த பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் கசப்பு தன்மை காரணமாக அந்த பீர்க்கங்காய் வீணாகி போகும்.

-விளம்பரம்-

அந்த காரணத்தினால் பெரும்பாலும் பீர்க்கங்காயை விரும்ப மாட்டார்கள். ஆனால் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் தோலிலும் கூட நாம் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட.

- Advertisement -

எனவே பீர்க்கங்காயை வாங்கி அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பீர்க்கங்காய் எப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் என்று தெரியவில்லை என்றால் இப்பொழுது நாம் சொல்லப் போகின்ற விதத்தில் பீர்க்கங்காய் பால் கூட்டு செய்து பாருங்கள்.

சுவை அருமையாக இருக்கும். சாம்பார் புளி குழம்பு காரக்குழம்பு என அனைத்திற்கும் ஒரு பர்பெக்ட்டான சைட் டிஷ் ஆக இந்த பால் கூட்டு இருக்கும். இந்த பால் கூட்டு செய்வதற்கு குறைந்த நிமிடங்கள் மட்டுமே போதும். சட்டென்று செய்துவிடலாம். இந்த சுவையான பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

பீர்க்கங்காய் பால் கூட்டு | Ridge Gourd Milk Kootu In Tamil

பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால்கசப்பு தன்மை காரணமாக அந்த பீர்க்கங்காய் வீணாகி போகும். அந்த காரணத்தினால் பெரும்பாலும் பீர்க்கங்காயை விரும்ப மாட்டார்கள். ஆனால் பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும்நல்லது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் தோலிலும் கூட நாம் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இந்த சுவையான பீர்க்கங்காய் பால் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge Gourd Milk Kootu
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பீர்க்கங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 கப் தேங்காய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவி சுத்தம் செய்த தோலை நீக்கிவிட்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்.தோலை வீணாக்காமல் அதில் சட்னி செய்து சாப்பிடலாம்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் பீர்க்கங்காயை சேர்த்துவதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பீர்க்கங்காயுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை பீர்க்கங்காய் உடன் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
  • மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய்போட்டு தாளித்து பீர்க்கங்காயுடன் சேர்த்து விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதித்த உடன் மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல்இரண்டிற்கும் நடுப்பட்ட பதத்தில் கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்க வேண்டும்.
  • இப்பொழுது சூடான பீர்க்கங்காய் பால் கூட்டு சாப்பிட தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg