ருசியான பீர்க்கங்காய் உருளை கறி ஒருமுறை இப்படி வச்சு பாருங்க, அட்டகாசமான சுவையில் இருக்கும்!

- Advertisement -

பீர்க்கங்காயில் உருளை சேர்த்து இப்படி செஞ்சா வேற லெவல் டேஸ்ட் கிடைக்குங்க. இட்லி தோசை ,சாதம், பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்தியாசமான பீர்க்கங்காய் உருளை கறி.இட்லி தோசை பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரே மாதிரி குருமா, கிரேவி, சட்னி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயையும் உருளையையும் வைத்து இப்படி ஒரு கிரேவி செய்து பாருங்கள். இது கொஞ்சம் வித்தியாசமான கறி தான். ஆனால், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அதேபோல சில பேர் பீர்க்கங்காயை கூட்டு பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க. நீர் சத்து நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு இப்படி கறி செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய் பிடிக்காது. எப்படி செய்வது என்பது தெரியாது. பீர்கங்காய், உருளை வைத்து ஒருமுறை இப்படி பீர்க்கங்காய் உருளை கறி வைத்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

பீர்க்கங்காய் உருளை கறி | Ridge gourd Recipe In Tamil

தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்குருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்குஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில்உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பீர்கங்காயை அடிக்கடிஉணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேருக்கு இந்தப் பீர்க்கங்காய்பிடிக்காது. எப்படி செய்வது என்பது தெரியாது. பீர்கங்காய், உருளை வைத்து ஒருமுறை இப்படிபீர்க்கங்காய் உருளை கறி வைத்து கொடுத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge Gourd Potato Curry
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • உப்பு தேவைக்கேற்ப
  • டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3. உருளைக்கிழங்கு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/4 கிலோ பீர்க்கங்காய்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டேபிள் ஸ்பூன்  சாம்பார் தூள்

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • காய்ந்த மிளகாயை மூழ்கும் வரை சுடு தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கைவேகவைத்து தோலுரித்து கைகளால் மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக அரிந்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கிக்கொள்ளவும், பீர்க்கங்காயை தோலெடுத்து விட்டு சிறிதாக அரிந்துக் கொள்ளவும். மிளகாயை ஊற வைத்த தண்ணீருடன்மைய அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் போடவும். கடுகு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு போட்டு பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பின் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும்.
     
  • வெங்காயம் சிவந்தவுடன் பீர்க்கங்காயை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, அரைத்த மிளகாய் மற்றும் உப்பை அதில் சேர்க்கவும்.
  • மசித்தஉருளைக்கிழங்கை போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்தவுடன், நசுக்கிய இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு கிளறிவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்,
  • சுவையான பீர்க்கங்காய் உருளை கறி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg