வீடே மணக்க மணக்க ரோட்டுக்கடை ஸ்டைல் எம்டி பிரியாணி செய்து பாருங்கள்!
இது பங்குனி மாதம் சிலர் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டார்கள். பிரியாணி சாப்பிட முடியலை என்கிற வருத்தம் கொஞ்சம் குறைவதற்கு வீட்டில் இருக்கும் பாசுமதி அரிசியை வைத்து சுலபமான முறையில் ஒரு பிளைன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்ற
இது பங்குனி மாதம் சிலர் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டார்கள். பிரியாணி சாப்பிட முடியலை என்கிற வருத்தம் கொஞ்சம் குறைவதற்கு வீட்டில் இருக்கும் பாசுமதி அரிசியை வைத்து சுலபமான முறையில் ஒரு பிளைன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த பிளைன் பிரியாணி தான். பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர்.
சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த பிளைன் பிரியாணி. மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது ரோட்டுக்கடைகளில் கிடைக்கும் பிரியாணியை விட எப்போதும் சுவை குறைவாகவே இருக்கும். எனவே வீட்டிலேயே ரோட்டுக்கடை பிளைன் பிரியாணி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான ரோட்டுக்கடை காளான் மசாலா இப்படி செய்து பாருங்க! நீங்கள் கடையில் வாங்கும் அதே சுவை!