- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இது பங்குனி மாதம் சிலர் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டார்கள். பிரியாணி சாப்பிட முடியலை என்கிற வருத்தம் கொஞ்சம் குறைவதற்கு வீட்டில் இருக்கும் பாசுமதி அரிசியை வைத்து சுலபமான முறையில் ஒரு பிளைன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த பிளைன் பிரியாணி தான். பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர்.
சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த பிளைன் பிரியாணி. மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது ரோட்டுக்கடைகளில் கிடைக்கும் பிரியாணியை விட எப்போதும் சுவை குறைவாகவே இருக்கும். எனவே வீட்டிலேயே ரோட்டுக்கடை பிளைன் பிரியாணி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான ரோட்டுக்கடை காளான் மசாலா இப்படி செய்து பாருங்க! நீங்கள் கடையில் வாங்கும் அதே சுவை!
Ingredients
Method
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, புதினா, மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் பிரியாணி தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
பின் எடுத்து கலந்து விட்டு எடுத்தால் சுவையான ரோட்டுக்கடை எம்டி பிரியாணி தயார். இந்த பிரியாணியை முட்டை மசாலா, வெங்காயம், தக்காளி ரைத்தாவுடன் சுவைக்கலாம்.






