- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Gravy, Snack
ரோட்டுக்கடை காளான் மசாலா விரும்பி சாப்பிடும் மசாலா பிரியர்களுகாகவே இந்த ரெசிபி. அதே மஸ்ரூம் மசாலாவை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையிலும், அதே சமயம் அதே சுவையோடு எந்தவித அஜினோ மோட்டோ சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியமாக சித்து விடலாம்.
இதையும் படியுங்கள் : ரோட்டு கடை கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
அந்த வகையில் இந்த காளான் மசாலாவை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த காளான் மசாலாவை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Ingredients
Method
முதலில் நறுக்கிய முட்டை கோஸை நன்கு தண்ணீரால் கழுவி தண்ணீரை வடித்து ஒரு பௌலில் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் மைதா மாவு, 2 டீஸ்பூன் சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, காஸ்மீரி சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொன்னிறமாக பொறித்து எடுத்த பிறகு அதனை சின்ன சின்னதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை இரண்டையும், சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சாஸ், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து கிளறி விடவும்.
பிறகு ஒரு சின்ன பௌலில் சோளமாவு 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து வெங்காயத்தில் ஊற்றி கிளறிவிடவும்.
கிரேவி நல்லா திக்கானதும் 1 காப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்பொழுது கிரேவி ஒரு கொதி வந்ததும் நாம் பொரித்து வைத்த வடைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறிவிடவும்.
பிறகு காளான் மசாலா கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.






