ரோட்டு கடை கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

kara chutney
- Advertisement -

பொதுவாக ரோட்டுக்கடைகளில் இட்லி, தோசைகளுக்கு தரப்படும் கார சட்னி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் எப்படி செய்வதென்று தெரியாமல் எப்பொழுதும் தக்காளி சட்னி, அல்லது தேங்காய் சட்னி தான் செய்து சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடை கார சட்னி சுவையில் நம் வீட்டிலேயே

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரைக்குடி ஸ்பெஷல் பூண்டு சட்னி இப்படி செய்து பாருங்க! வழக்கம் போல் வைக்காமல் இப்படி வையுங்கள்!

- Advertisement -

சட்டுனு கார சட்னி செய்து விடலாம். இந்த கார சட்னி செய்து சுட சுட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கார சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

kara chutney
Print
4.60 from 5 votes

கார சட்னி | Kara Chutney Recipe In Tamil

பொதுவாக ரோட்டுக்கடைகளில் இட்லி, தோசைகளுக்கு தரப்படும் கார சட்னி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் எப்படி செய்வதென்று தெரியாமல் எப்பொழுதும் தக்காளி சட்னி, அல்லது தேங்காய் சட்னி தான் செய்து சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடை கார சட்னி சுவையில் நம் வீட்டிலேயே சட்டுனு கார சட்னி செய்து விடலாம்.
இந்த கார சட்னி செய்து சுட சுட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கார சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time11 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Kara chutney, கார சட்னி
Yield: 4 people

Equipment

 • 1 கடாய்
 • மிக்ஸி

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  அரைக்க:

  • 7 பல் பூண்டு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 18 வர மிளகாய்
  • 2 தக்காளி நறுக்கியது
  • வெள்ளம் கொஞ்சம்
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு

  தாளிக்க:

  • டேபிள் ஸ்பூன் நல் லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்

  செய்முறை

  செய்முறை:

  • முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்து சிவந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னி சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் அடுப்பை நிறுத்தவும் இப்பொழுது சுவையான ரோட்டுக்கடை கார சட்னி தயார்.