- Advertisement -
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுட சுட காரசாரமான சுவையில் பூண்டு சாதம் இப்படி செய்து பாருங்க ?
- Advertisement -
பூண்டு குழம்பு, பூண்டு துவையல், பூண்டு பால் என எப்படி சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் குறையாது. இன்று இவ்வளவு ருசியான பூண்டு சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
காரைக்குடி ஸ்பெஷல் பூண்டு சட்னி | Pundu Chutney Recipe in Tamil
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது. பூண்டு குழம்பு, பூண்டு துவையல், பூண்டு பால் என எப்படி சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் குறையாது.
Yield: 3 People
Calories: 149kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி ஜார்
தேவையான பொருட்கள்
- 4 முழு பூண்டு
- உப்பு தேவையான அளவு
- மிளகாய் தூள் காரத்துக்கு ஏற்ப
- தண்ணீர் தேவையான அளவு
தாளிப்பதற்கு
- 2 tsp எண்ணெய்
- 1/2 tsp கடுகு
- 3 வரமிளகாய்
- கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கம் முழு பூண்டை எடுத்து அனைத்து பக்கம் படும் படி நன்றாக நெருப்பில் சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
- பின் நெருப்பில் சுட்ட பூண்டி் தோலை உரித்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பின் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் கடுகு சேர்க்கவும் கடுகு நன்கு பொரிந்ததும் வரமிளகாய் மற்றம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்த பூண்டு, மிளகாய் தூள், உப்பு கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மற்றும் சுலபமான காரைக்குடி பூண்டு சட்னி தயார்.
Nutrition
Serving: 200g | Calories: 149kcal | Carbohydrates: 8g | Fat: 1g | Fiber: 2g