- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
பூண்டு சாதம் உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கு தினமும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ ஒரு முறை இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பிடித்த சாதம் ரெசிபியாக கூட
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கேரட் சாதம் செய்வது எப்படி ?
மாறி விடும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான பூண்டு சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு இதனை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்துகொள்ளவும்.
கடைசில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களையும் போட்டு சிவக்க வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரமித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு அதில் சாதம் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
பிறகு வதக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
இப்பொழுது சுவையான பூண்டு சாதம் தயார்.






