Home சட்னி கிராமங்களில் செய்யக்கூடிய காரசாரமான ரோஜாப்பூ சட்னி இப்படி செய்து பாருங்கள்!

கிராமங்களில் செய்யக்கூடிய காரசாரமான ரோஜாப்பூ சட்னி இப்படி செய்து பாருங்கள்!

உங்களுக்கு இட்லி , தோசை , சாதம் கூட சாப்பிட சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் ஈஸியா காரமா சட்னி செய்தால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த ஈஸியான ரோஜாப்பூ சட்னியை நம்ம செய்ய போறோம்.

-விளம்பரம்-

நம்ம இளமையா பேச்சுலர்ஸா இருக்கும் போது அதிகழா கார உணவுகளை தான் எடுத்துபோம். அப்படி நமக்கு பிடித்தமான ஒரு சட்னி அப்படினா அது காரசட்னி தான். கண்ணுல தண்ணீர் வர வர இட்லிக்கோ இல்லை என்றால் தோசைக்கோ இந்த காரசட்னி சேர்த்து சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். இப்போது செய்ய இருக்கும்  கார சட்னி செம்ம காரமா இருக்க போகுது உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு பிடிக்கும் அப்படிங்கிறது இந்த ரோஜாப்பூ சட்னி சாப்பிட்டால் தெரிஞ்சிக்கலாம். அப்படி ஒரு காரமா இருக்க போகுது.

இட்லியை தோசை இதுக்கெல்லாம் சுவையை கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்க ருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த ரோஜாப்பூ சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும் இந்த ரோஜாப்பூ சட்னி. சரி வாங்க இந்த ரோஜாப்பூ சட்னி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

ரோஜாப்பூ சட்னி | Rojapoo Chutney Recipe In Tamil

காரசட்னி செம்ம காரமா இருக்க போகுது உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு பிடிக்கும் அப்படிங்கிறது இந்த ரோஜாப்பூ சட்னி சாப்பிட்டால் தெரிஞ்சிக்கலாம். அப்படி ஒரு காரமா இருக்க போகுது. இட்லியை தோசை இதுக்கெல்லாம் சுவையை கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்க ருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த ரோஜாப்பூ சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும் இந்த ரோஜாப்பூ சட்னி.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Rojapoo Chutney
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 6 பச்சை மிளகாய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 வரமிளகாய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சை மிளகாயை காம்பு பகுதியை நீக்கி  விடவேண்டும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில்  பச்சைமிளகாய் சேர்த்து அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் வெங்காயம்  சேர்த்து விழுதாக  அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை அரைத்து வைத்துள்ள சட்னியில் கலந்து விடவும்
  • இந்த சட்னியை நன்றாக கலந்து விட்டு இட்லி , தோசைக்கு பரிமாறினால் சுவையான ரோஜாப்பூ சட்னி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 14g | Sodium: 232mg | Potassium: 235mg | Fiber: 1g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg