வாயில் வைத்தவுடன் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ரோஸ் மில்க் பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென்
சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த பர்பியை செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் மைதா இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரோஸ் மில்க் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம்.
வெயில் காலம் வந்துவிட்டாலே ரோஸ் மில்க் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால், கொளுத்தும் வெயிலுக்கு சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என ரோஸ் மில்க் வாங்கி நம்மில் பலர் குடித்திருப்போம். ஆனால் ரோஸ் மில்க்கில் வித்தியாசமாக ஏதேனும் ஏதேனும் செய்ய வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? அப்படிப்பட்ட ரோஸ் மில்க் பிரியர்களுக்கு தான் இந்த தொகுப்பு. உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற ரோஸ் மில்க் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த ரோஸ் மில்க் பர்பி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம்.
இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏத்த மாதிரி ஒரு சூப்பரான வித்தியாசமான பொட்டுக்கடலை மில்க் ஷேக் செய்யலாம்!