காரசாரமான ருசியில் சாமை சிக்கன் நூடுல்ஸ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனியே ருசி தான்!

காலத்திற்கேற்றவாறு நம்முடைய வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் நம்முடைய உணவு முறைகளும் மாறிவிட்டது. பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதில் பெரும்பாலும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவை இடம்பெறும். இந்த நூடுல்ஸ் வகை உணவுகள் சீன நாட்

By Prem Kumar · 31/12/2023

காலத்திற்கேற்றவாறு நம்முடைய வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் நம்முடைய உணவு முறைகளும் மாறிவிட்டது. பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதில் பெரும்பாலும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவை இடம்பெறும். இந்த நூடுல்ஸ் வகை உணவுகள் சீன நாட்டு உணவு முறைகளில் ஒன்று. இது இப்போது பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். தற்போது பாஸ்ட் புட் துரித உணவு கடைகளில் இந்த நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும். இதில் அதிகப்படியான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கன் 65 அனைவருக்கும் பிடிக்கும் அதனை விட இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிக்கன் நூடுல்ஸ்.

நூடுல்ஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நன்மையை அளிக்கும். அதனை விட நாம் செய்தால் அதில் சுத்தமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் இருக்கும். குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைப்பதற்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி. வேகவைத்த நூடுல்ஸுடன் சிக்கன் இந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. நூடுல்ஸ் பொதுவாக குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. இதனை ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தால் நமக்கும் நிம்மதியாக இருக்கும். சிறுதானியங்கள் எனப்படும் பாரம்பரிய தானியங்கள் பல வகை உண்டு என்றாலும் நாம் இப்போது வரை கம்பு மற்றும் கேழ்வரகை அதிகமாக பயன்படுத்துகிறோம். தற்போது உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு காரணமாக பாரம்பரிய உணவு பக்கம் திரும்பியிருக்கிறோம் இதை கொண்டு‌ இட்லி, தோசை, பணியாரம், பொங்கல் என்று விதவிதமாக செய்யலாம். ஆகையால் சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வீட்டில் சிக்கன் நூடுல்ஸ் செய்து சாப்பிடுங்கள்.

இதனையும் படியுங்கள் : சுவையான சாமை ஜவ்வரிசி தோசை காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்கள்

Recipes AMP · Quick view
View full