காரசாரமான ருசியில் சாமை சிக்கன் நூடுல்ஸ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனியே ருசி தான்!

- Advertisement -

காலத்திற்கேற்றவாறு நம்முடைய வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் நம்முடைய உணவு முறைகளும் மாறிவிட்டது. பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதில் பெரும்பாலும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவை இடம்பெறும். இந்த நூடுல்ஸ் வகை உணவுகள் சீன நாட்டு உணவு முறைகளில் ஒன்று. இது இப்போது பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். தற்போது பாஸ்ட் புட் துரித உணவு கடைகளில் இந்த நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும். இதில் அதிகப்படியான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கன் 65 அனைவருக்கும் பிடிக்கும் அதனை விட இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிக்கன் நூடுல்ஸ்.

-விளம்பரம்-

நூடுல்ஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நன்மையை அளிக்கும். அதனை விட நாம் செய்தால் அதில் சுத்தமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் இருக்கும். குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைப்பதற்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி. வேகவைத்த நூடுல்ஸுடன் சிக்கன் இந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. நூடுல்ஸ் பொதுவாக குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. இதனை ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தால் நமக்கும் நிம்மதியாக இருக்கும். சிறுதானியங்கள் எனப்படும் பாரம்பரிய தானியங்கள் பல வகை உண்டு என்றாலும் நாம் இப்போது வரை கம்பு மற்றும் கேழ்வரகை அதிகமாக பயன்படுத்துகிறோம். தற்போது உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு காரணமாக பாரம்பரிய உணவு பக்கம் திரும்பியிருக்கிறோம் இதை கொண்டு‌ இட்லி, தோசை, பணியாரம், பொங்கல் என்று விதவிதமாக செய்யலாம். ஆகையால் சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வீட்டில் சிக்கன் நூடுல்ஸ் செய்து சாப்பிடுங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

சாமை சிக்கன் நூடுல்ஸ் | Samai Noodles Recipe In Tamil

நூடுல்ஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நன்மையை அளிக்கும். அதனை விட நாம் செய்தால் அதில் சுத்தமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் இருக்கும். குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைப்பதற்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி. வேகவைத்த நூடுல்ஸுடன் சிக்கன் இந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. நூடுல்ஸ் பொதுவாக குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. இதனை ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தால் நமக்கும் நிம்மதியாக இருக்கும். சிறுதானியங்கள் எனப்படும் பாரம்பரிய தானியங்கள் பல வகை உண்டு என்றாலும் நாம் இப்போது வரை கம்பு மற்றும் கேழ்வரகை அதிகமாக பயன்படுத்துகிறோம். தற்போது உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு காரணமாக பாரம்பரிய உணவு பக்கம் திரும்பியிருக்கிறோம் இதை கொண்டு‌ இட்லி, தோசை, பணியாரம், பொங்கல் என்று விதவிதமாக செய்யலாம். ஆகையால் சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வீட்டில் சிக்கன் நூடுல்ஸ் செய்து சாப்பிடுங்கள்.
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Samai Noodles
Yield: 3 People
Calories: 450kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் சாமை நூடுல்ஸ்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கேரட்
  • 50 கி முட்டைக்கோஸ்
  • 4 முட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 150 கி போன்லெஸ் சிக்கன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  • பின் முட்டையுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து கலந்து வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாமை நூடுல்ஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 450kcal | Carbohydrates: 6.76g | Protein: 74g | Fat: 16.7g | Saturated Fat: 15g | Fiber: 7.6g | Calcium: 17mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : சுவையான சாமை ஜவ்வரிசி தோசை காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்கள்