எள்ளு சேர்த்து செய்ய படும் அனைத்து உணவும் மிகுந்த வாசமுடன் இருக்கும்.எள்ளு கத்திரிக்காய், முறுக்கு, அதிரசம் போன்ற வற்றில் தான் . “இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத் தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழிக்கேற்ற எள்ளில் மிகுதியான ஆரோக்கியம் உள்ளது. எள்ளு சேர்த்து செய்யப்படும் சைவ உணவே அவ்வளவு ருசியாக இருக்கும் எனும் போது. எள்ளு அசைவத்தில் சேர்த்து செய்தால் இன்னும் அதித சுவையும் மணமுடன் இருக்கும். இந்த எள்ளு மட்டன் குழம்பு வித்தியாசமான செய்தால்.. எப்போதும் மட்டும் குழம்பு இந்த முறையில் எள்ளு சேர்த்து செய்வீர்கள்.
எள் மட்டன் கறி வித்தியாசமானது, மற்ற மட்டன் ரெசிபிகளை மிஞ்சும் அளவுக்கு ருசி அதிகமாக இருக்கும்.எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.
இந்த எள்ளு எந்த உணவோடு சேரும் போடும், உணவுற்குள் சேர்ந்து சுவையை கூடும். இந்த எள்ளு மட்டனுடன் சேர்த்து செய்யும் பொழுது சிறப்பான ருசியை அளிக்கும். வாங்க இந்த ருசியான எள்ளு மட்டன் குழம்பு எப்படி செய்வது என்ட்ரி பார்ப்போம்.
எள்ளு மட்டன் குழம்பு | Sesame Mutton Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மட்டன்
- 1 தேக்கரண்டி உப்பு
- 2 தேக்கரண்டி தயிர்
- 1 தேக்கரண்டி மிளகு
- 2 தேக்கரண்டி எள்
- 2 கிராம்பு
- 6 முந்திரி
- 1 பட்டை
- 3 வெங்காயம்
- 3 தக்காளி
- 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
- 8 காய்ந்த மிளகாய்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 6 பூண்டு
- 1 முருங்கைக்காய்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
- முதலில் மட்டன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.
- பின்னர் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். ஆற வைத்து மிக்ஸியில்அரைத்துக் கொள்ளவும்.
- பின்பு மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும் பின்னர் 2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்
- பிறகு ஒரு முருங்கைக்காய் நறுக்கி சேர்க்கவும். மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் கிரேவி தயார்.