Advertisement
சைவம்

ருசியான செட் தோசை இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 தோசை சாப்பிடுவாங்க!

Advertisement

ஹோட்டல்களில் கிடைக்கும் செட் தோசை வீட்டில் கிடைத்தால் யார் தான் வேண்டாம்ன்னு சொல்லுவாங்க. எப்போதும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செட் தோசையை செய்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Advertisement

இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது செட் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த செட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

ருசியான செட் தோசை | Set Dosa Recipe in Tamil

Print Recipe
எப்போதும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செட் தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது செட் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 80

Equipment

  • 1 கிரைண்டர் (அ) மிக்ஸி
  • 1 பெரிய பாத்திரம்
  • 1 தோசைக்கல்

Ingredients

  • 2 கப் பச்சரிசி
  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 2 கப் உளுந்த பருப்பு
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கப் துருவிய கேரட்
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி
  • 1/4 கப் இட்லி பொடி
  • உப்பு தேவையான அளவு
  • நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • செட் தோசை செய்வதற்கு முதலில்
    Advertisement
    பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • பிறகு அவற்றை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாகக் கலந்து, அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • பின் நாம் கலந்து வைத்துள்ள மாவை 10 முதல் 12 மணி நேரம் வரை நன்கு புளிக்க விடவும். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சுடேற்றவும்.
  • பின்பு எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசையாக வார்த்து, அதன் மீது தேங்காய் துருவலைத் தூவி, சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், தோசையை எடுத்து தட்டில் வைக்கவும்.
  • இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி வெந்தவுடன் எடுக்கவும்.
  • பிறகு அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்கவும். அவ்வளவு தான் ருசியான செட் தோசை ரெடி.

Nutrition

Serving: 600Gram | Calories: 80kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Fat: 0.1g | Saturated Fat: 0.01g | Cholesterol: 1mg | Potassium: 10mg | Fiber: 1g | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

29 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

2 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

2 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

15 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

15 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

15 மணி நேரங்கள் ago