- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
ஹோட்டல்களில் கிடைக்கும் செட் தோசை வீட்டில் கிடைத்தால் யார் தான் வேண்டாம்ன்னு சொல்லுவாங்க. எப்போதும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செட் தோசையை செய்து சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான கேரளா தேங்காய் தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஈஸியான ரெசிபியும் கூட சரி இப்பொது செட் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த செட் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
செட் தோசை செய்வதற்கு முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பிறகு அவற்றை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாகக் கலந்து, அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பின் நாம் கலந்து வைத்துள்ள மாவை 10 முதல் 12 மணி நேரம் வரை நன்கு புளிக்க விடவும். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சுடேற்றவும்.
பின்பு எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசையாக வார்த்து, அதன் மீது தேங்காய் துருவலைத் தூவி, சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், தோசையை எடுத்து தட்டில் வைக்கவும்.
இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி வெந்தவுடன் எடுக்கவும்.
பிறகு அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்கவும். அவ்வளவு தான் ருசியான செட் தோசை ரெடி.






