Advertisement
அசைவம்

சிம்பிள் சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

Advertisement

பொதுவா எவ்வளவுதான் நான் வெஜ் வகைகள் இருந்தாலும் சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு நான்வெஜ் அப்படினா அது சிக்கன்ல தான் சொல்லணும். ரெண்டு வயசு குழந்தைகள் ஆரம்பிச்சு பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த சிக்கன் ரொம்பவே பிடிக்கும். அதுலயும் ரொம்ப டேஸ்டான சிக்கன் செஞ்சு கொடுத்தா போதும் வழிச்சு வழிச்சு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சிக்கன்.

இந்த சிக்கன் வச்சு நம்ம நிறைய செய்யலாம் சிக்கன் பிரியாணி சிக்கன் தொக்கு சிக்கன் ஊறுகாய், சிக்கன் 65 அப்படின்னா எக்கச்சக்கமான சிக்கன் வெரைட்டிஸ் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சோம்பேறித்தனமாக இருக்கும் போது ரொம்பவே சிம்பிளான சிக்கன் பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள்தான் நமக்கு தேவைப்படும். ஆனால் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

Advertisement

இதுக்கு நமக்கு தேவைப்படுறது சிவப்பு கலர் சிக்கன் மசாலா மட்டும்தான். நமக்கு நிறைய சிக்கன் மசாலா கடைகள்ல கிடைக்கும் ஆனால் சிவப்பு கலர்ல கிடைக்கிற இந்த சிக்கன் மசாலா வச்சு இந்த சிக்கன் பிரட்டல் செய்யும்போது சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரசத்துக்கு சைடிஷா வைத்து சாப்பிடலாம்.

அதுமட்டுமில்லாம தயிர் சாதத்துக்கு இந்த சிக்கன் பிரட்டல வச்சு சாப்பிட்டா எவ்ளோ சாப்பாடு வேணா சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான சிக்கன் பிரட்டல் தான் இது. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சிக்கனை வச்சு சிம்பிளான சிக்கன் பிரட்டல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

சிம்பிள் சிக்கன் பிரட்டல் | Simple Chicken Pirattal In Tamil

Advertisement
Print Recipe
சிக்கன் வச்சு நம்ம நிறைய செய்யலாம் சிக்கன் பிரியாணி சிக்கன் தொக்கு சிக்கன் ஊறுகாய், சிக்கன்65 அப்படின்னா எக்கச்சக்கமான சிக்கன் வெரைட்டிஸ் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சோம்பேறித்தனமாகஇருக்கும் போது ரொம்பவே சிம்பிளான சிக்கன் பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க.இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு
Advertisement
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள்தான் நமக்கு தேவைப்படும்.ஆனால் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். சாதத்துக்கு இந்த சிக்கன் பிரட்டல வச்சு சாப்பிட்டாஎவ்ளோ சாப்பாடு வேணா சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான சிக்கன் பிரட்டல்தான் இது.
Course starters
Cuisine tamil nadu
Keyword Simple Chicken Pirattal
Prep Time 10 minutes
Cook Time 8 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 டேபிள் ஸ்பூன் சிவப்பு கலர் சிக்கன் மசாலா
  • மல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை சேர்த்து பத்து நிமிடங்களுக்கு நன்றாக கிளறி எடுக்கவும்
  • பிறகு அதில் சிக்கன் மசாலா பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  • ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை நன்றாக வேக வைக்கவும்.
  • சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால்சுவையான சிக்கன் பிரட்டல் தயார்
  • இதற்கு சிவப்பு கலர் சிக்கன் மசாலா மட்டுமே சுவை அருமையாக இருக்கும்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

10 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

21 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago