பருப்பு சேர்த்து ருசியான சிவப்பு தண்டு கீரை கூட்டு ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள்! கீரை பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!

- Advertisement -

உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் காய்கறி மற்றும் கீரை வகைகளில் அதிகமாக இருக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்களாவது கீரைகள் உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகளோ அசைவத்தை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சைவ உணவுகளை விருப்பமாக சாப்பிடுவதில்லை. அதிலும், கீரைகள் என்றாலே அதனை ஒதுக்கி தான் வைக்கிறார்கள்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை செய்து, அவர்களுக்கு பிடித்தமான சுவையில் சற்று காரம் குறைவாகவும் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் விரும்பும் சுவையில் சிவப்பு தண்டுக்கீரை கூட்டை செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ரொம்ப ரொம்ப சுலபமாக சிவப்பு தண்டுக்கீரை கூட்டு இப்படி செஞ்சு பாருங்க. சும்மா ஜம்முனு இருக்கும். ஆரோக்கியம் தரும் இந்த கூட்டை இன்னும் கொஞ்சம் போடுங்க! என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பொதுவாகவே குழந்தைகள் என்றாலும், பெரியவர்கள் என்றாலும் கீரை வகைகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள்.

- Advertisement -

ஆனால், கீரை வகைகளை கொஞ்சம் சுவையாக சமைத்து கொடுத்தால் சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். அப்படி ஒரு சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் சிவப்பு தண்டுக்கீரை வாங்கினால் ஒரு முறை இப்படி ஒரு கூட்டை சமைத்து பாருங்கள்.

Print
No ratings yet

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Thandu Keerai Kootu In Tamil

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளைசெய்து, அவர்களுக்கு பிடித்தமான சுவையில் சற்று காரம் குறைவாகவும் செய்து கொடுக்க வேண்டும்.அவ்வாறு அவர்கள் விரும்பும் சுவையில் சிவப்பு தண்டுக்கீரை கூட்டை செய்து கொடுத்தால்வேண்டாம் என்று சொல்லாமல் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். ரொம்ப ரொம்ப சுலபமாகசிவப்பு தண்டுக்கீரை கூட்டு இப்படி செஞ்சு பாருங்க. ஒரு சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Sivappu Thandu Keerai Kootu
Yield: 4
Calories: 337kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு சிவப்பு தண்டுக்கீரை
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 3 மிளகாய் வற்றல்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • கீரையை நன்கு தண்ணீர் வைத்து மண் போக அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.
  • பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும், கீரையை தண்டோடு நறுக்கி கொள்ளவும், வெங்காயம், பூண்டு பல், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஊறிய பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து வைக்கவும்,
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும், கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும், நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவைக்கேற்ப சிறிது உப்பு சேர்க்கவும்.
  • வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். ஒன்று சேர்ந்து கொதி வரும் போது அரைத்த தேங்காய் சேர்க்கவும், சிறிது நேரம் அடுப்பில் சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி இறக்கவும்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதை தயிர் சாதம் மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 200g | Calories: 337kcal | Carbohydrates: 12g | Protein: 167g | Saturated Fat: 1.7g | Sodium: 45mg | Potassium: 968mg | Fiber: 67g | Iron: 2mg

இதையும் படியுங்கள் : மதிய உணவுடன் சாப்பிட ருசியான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!