நீங்கள் செய்யும் ஒவ்வொரு இட்லியும் பூ போன்று வர வெங்கடேஷ் பட் சொல்லும் ரகசியம் இதோ!

- Advertisement -

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ… 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் :ருசியான வெஜ் பன்னீர் இட்லி, இப்படி செஞ்சி பாருங்க இதன் சுவை அட்டகாசமா இருக்கும்!!

- Advertisement -

ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான். ஏனென்றால், இட்லி சாஃப்ட்டாக இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் இல்லையென்றால். இட்லி என்பது இரும்பாக இருந்தால் இட்லி பிடிக்காத வெறுப்பு உணவு பட்டியலில் சேர்ந்துவிடும்.இந்த பதிவில் மிக எளிதாக பூ போன்ற இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.

Print
3.10 from 10 votes

பூ போன்ற‌ இட்லி | Soft Idly Recipe in Tamil

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான். 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே. மல்லிகைப் பூவைவிட சாஃப்ட்டான இட்லி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சாஃப்ட் இட்லி செய்வதற்கான ரகசியம் இதோ. 2 டீஸ்பூன் இந்த பொருளை மட்டும் சேர்த்து மாவு அரைச்சு பாருங்க! மல்லிகைப்பூவே தோற்றுவிடும் அளவுக்கு சாஃப்ட் இட்லி கிடைக்கும் பாருங்க. ஆயக் கலைகள் 64 என்பார்கள். அதில் சமையல் கலையும் ஒன்று. அதிலும் இட்லிக்கு மாவு அரைப்பது என்பது நிஜமாகவே கலைதான்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: idly
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 கிரைண்டர்
  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 கப் இட்லி ரவா
  • 1 கப் உளுந்து
  • உப்பு தேவையான
  • தண்ணீர் தேவையான

செய்முறை

  • இட்லி மிக மிருதுவாக இருப்பதற்கு தரமான உளுந்து மிக அவசியம், உளுந்தை நாம் எப்படி அரைக்கிறோம் என்பதை பொறுத்தே இட்லியின் மிருதுத்தன்மை முடிவாகும்.
  • முன்பெல்லாம் இட்லி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு இரண்டு மணிநேரத்துக்கு ஊறவைத்து விடுவார்கள், தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு வெள்ளை துணியில் காயவைத்து விடுவார்கள்.
  • மறுநாள் காலை அதை அரைத்து இட்லி ரவா தயாரித்து விடுவார்கள், ஆனால் இப்போதே இட்லி ரவா தனியாக கடைகளில் கிடைக்கிறது.
  • அதை பயன்படுத்திக் கொள்ளலாம், உளுந்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த உளுந்து பக்குவமாக சுமார் 20 நிமிடங்களுக்கு ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து தெளித்து ஆட்டவும்.
  • உளுந்து நன்றாக பொங்கிவர வேண்டும், இந்த நேரத்தில் இட்லி ரவாவை சுத்தம் செய்யும் போதே ஊறிவிடும், அதை அப்படியே விட்டு விடவும்.
  • ரவா ஊறி பக்குவத்திற்கு வந்துவிடும், உளுந்தை ஆட்டி முடித்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் தேவையான அளவு உப்பு, இட்லி ரவா சேர்த்து நன்றாக கலக்கிவிடும், எவ்வளவு தூரம் இரண்டும் ஒன்றாக சேர கலக்குகிறோமோ அவ்வளவு இட்லி மிருதுவாக வரும்.
  • கைகளின் சூட்டிலேயே இட்லி மாவு புளிக்கத் தொடங்கும், சுமார் 6 முதல் 8 மணிநேரம் கழித்து இட்லி ஊற்றி எடுத்தால் பூ போன்ற பஞ்சு இட்லி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 58kcal | Carbohydrates: 12.5g | Protein: 1.7g | Fat: 0.4g | Saturated Fat: 0.1g | Sodium: 75mg | Potassium: 41mg | Fiber: 0.5g | Calcium: 0.3mg