உடல் வெப்பத்தையும் தணிக்க சுரைக்காய் தயிர் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்க!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக சப்பாத்தி உள்ளது. இதற்கு குருமா அல்லது தொக்கு, கிரேவி போன்றவை வைத்து தான் சாப்பிடுவோம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஷாக புதிது புதிதாக வைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்

By Prem Kumar · 23/4/2024

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக சப்பாத்தி உள்ளது. இதற்கு குருமா அல்லது தொக்கு, கிரேவி போன்றவை வைத்து தான் சாப்பிடுவோம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஷாக புதிது புதிதாக வைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அதுவும் சுரைக்காயை பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் சப்பாத்திக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். சுரைக்காய் வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து குறைவை தடுக்க சுரைக்காய் நல்ல உணவு. சுரைக்காயில் கூட்டு அல்லது தொக்கு போல்தான் பலரும் செய்து சாப்பிடுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக தயிர் சேர்த்து கிரேவியாக செய்து சாப்பிடுங்கள்.

இதனால் உடலுக்கு கூடுதல் குளுர்ச்சி தரும். உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும். உஷ்ணத்தால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க அடிக்கடி நீர் காய் வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். அந்த வகையில் இந்த சுரைக்காய் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை பத்தே நிமிடத்தில் செய்து பார்க்கலாமே! சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சுரைக்காய் தயிர் கிரேவி.

இதனையும் படியுங்கள் : வீட்டில் சுரைக்காய் இருந்தால் போதும் சூப்பரான சுரைக்காய் பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Recipes AMP · Quick view
View full