சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக சப்பாத்தி உள்ளது. இதற்கு குருமா அல்லது தொக்கு, கிரேவி போன்றவை வைத்து தான் சாப்பிடுவோம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஷாக புதிது புதிதாக வைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அதுவும் சுரைக்காயை பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் சப்பாத்திக்கு ஏற்ற சுரைக்காய் தயிர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம். சுரைக்காய் வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து குறைவை தடுக்க சுரைக்காய் நல்ல உணவு. சுரைக்காயில் கூட்டு அல்லது தொக்கு போல்தான் பலரும் செய்து சாப்பிடுவார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக தயிர் சேர்த்து கிரேவியாக செய்து சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு கூடுதல் குளுர்ச்சி தரும். உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும். உஷ்ணத்தால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க அடிக்கடி நீர் காய் வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். அந்த வகையில் இந்த சுரைக்காய் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை பத்தே நிமிடத்தில் செய்து பார்க்கலாமே! சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சுரைக்காய் தயிர் கிரேவி.
சுரைக்காய் தயிர் கிரேவி | Sorakkai Curd Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 சுரைக்காய்
- 1/4 கப் சின்ன வெங்காயம்
- 2 வர மிளகாய்
- 4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 துண்டு இஞ்சி
- 1/4 கப் தேங்காய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 3/4 கப் தயிர்
செய்முறை
- முதலில் சுரைக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், தேங்காய், மிளகாய், சீரகம், இஞ்சி, வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- பின் வேக வைத்துள்ள சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் தயிர் கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்டில் சுரைக்காய் இருந்தால் போதும் சூப்பரான சுரைக்காய் பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!