Home ஸ்வீட்ஸ் வீட்டில் சுரைக்காய் இருந்தால் போதும் சூப்பரான சுரைக்காய் பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!...

வீட்டில் சுரைக்காய் இருந்தால் போதும் சூப்பரான சுரைக்காய் பர்பி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! அப்புறம் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த பர்பியை செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது.

-விளம்பரம்-

மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். இந்த ஸ்வீட் செய்வதற்கு ஒரு கப் மைதா இருந்தால் போதும் அனைவருக்கும் பிடித்த ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான சுரைக்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற சுரைக்காய் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த சுரைக்காய் பர்பி சுவையாக இருக்கும். பள்ளி விட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதுபோன்ற ஸ்வீட் செய்து கொடுக்கலாம்.

Print
No ratings yet

சுரைக்காய் பர்பி | Bottle Gourd Burfi Recipe In Tamil

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த பர்பியை செய்யாமல் இருக்க மாட்டார்கள். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் பர்பி செய்து முடித்துவிடலாம். குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான சுரைக்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Bottle Gourd Burfi
Yield: 4 People
Calories: 51kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

  • 1 சுரைக்காய்
  • 1 கப் பால்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1 கப் பால் பவுடர்
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • நறுக்கிய முந்திரி, பாதாம் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சுரைக்காயை தோல் நீக்கி அதன் விதைகளையும் எடுத்து விட்டு பின் அதை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் சுரைக்காயில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து சேர்த்து வதக்கவும்.
  • பின் சுரைக்காய் லேசாக வதங்கியதும் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து வேக வைக்கவும். சுரைக்காயை சிறிது வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
  • பின் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சுண்டி வரும் வரை வதக்கவும். பின் சிறிதளவு நெய், ஏலக்காய் தூள், பச்சை புட் கலர் சேர்த்து நன்கு கலந்து சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு பெரிய தட்டில் நெய் தடவி பர்பி கலவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பி கொள்ளவும். பின் அதன் மேல் நறுக்கிய பாதாம் முந்திரி தூவவும்.
  • இதனை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்‌. அரை மணிநேரம் கழித்து பர்பி மாதிரி வெட்டி பரிமாறவும். விருப்பப்பட்டால் மேலே சில்வர் லீப் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் பர்பி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 51kcal | Carbohydrates: 3.7g | Protein: 6g | Fat: 4.1g | Sodium: 92mg | Potassium: 136mg | Fiber: 3.1g | Sugar: 3.8g | Vitamin A: 15IU | Vitamin C: 8.49mg | Calcium: 23mg | Iron: 4.2mg

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய முறையில் இனிப்பும், புளிப்புமாக இருக்கும் சுரைக்காய் தொக்கு இப்படி செஞ்சா அருமையாக இருக்குமே!