சோயா மொச்சை கிரேவி செய்து பாருங்கள், பக்கத்து வீடு வரைக்கும் வாசனை சும்மா இழுக்கும்!

மொச்சைக்காய் சீசன் வந்தாலே எல்லார் வீட்டிலேயும் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது மொச்சைக்காய் குழம்பு மொச்சைக்காய் கிரேவி மொச்சைக்காய் அவியல் மொச்சை காயா தான் இருக்கும் காரணம் அதோட டேஸ்ட் அவ்வளவு ஒரு அருமையா இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய மொச்சைக்காய்க்கு நிறைய

By ·

மொச்சைக்காய் சீசன் வந்தாலே எல்லார் வீட்டிலேயும் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது மொச்சைக்காய் குழம்பு மொச்சைக்காய் கிரேவி மொச்சைக்காய் அவியல் மொச்சை காயா தான் இருக்கும் காரணம் அதோட டேஸ்ட் அவ்வளவு ஒரு அருமையா இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய மொச்சைக்காய்க்கு நிறைய ஃபேன்ஸும் இருப்பாங்க மூணு நேரமும் அதை கொடுத்தா கூட சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க. அந்த வகையில சோயாவும் முற்றிலும் போட்டு ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல கிரேவி தான் நம்ம செய்யப் போறோம்.

இந்த கிரேவிய நம்ம சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். உங்க வீட்டில மொச்சை காய் வாங்கினால் எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா செய்றீங்களா அதனால எல்லாரும் உங்களை திட்டறாங்களா அப்போ இந்த சோயா மொச்சை கிரேவி உங்களுக்காக தான். இந்த மொச்சையின் சுவையாக மட்டும் போட்டு இந்த கிரேவி செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் உங்க வீட்ல இருக்குற எல்லாரும் உங்களை பாராட்டிக்கிட்டே தான் சாப்பிடுவாங்க.

இந்த சோயா மொச்சை கிரேவிய அன்னைக்கு மட்டுமில்லாம அடுத்த நாளும் வச்சு சாப்பிட ரொம்பவே டேஸ்டா இருக்கும் அதனால செய்யும் போதே கொஞ்சம் அதிகமா கூட நீங்க செஞ்சு வச்சுக்கலாம். இதுல நம்ம அரைச்சு வச்ச மசாலாவை சேர்க்கிறதால இன்னுமே வாசனையும் சுவையும் அதிகமா இருக்கும். குழந்தைகளுக்கும் கூட இந்த கிரேவி ரொம்பவே பிடிக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கும் கூட இதை வைத்துக் கொடுக்கலாம் தயிர் சாதம் ரசம் சாதத்துக்கு எல்லாம் இந்த கிரேவி செம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சோயா மொச்சை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full