Home சைவம் சோயா மொச்சை கிரேவி செய்து பாருங்கள், பக்கத்து வீடு வரைக்கும் வாசனை சும்மா இழுக்கும்!

சோயா மொச்சை கிரேவி செய்து பாருங்கள், பக்கத்து வீடு வரைக்கும் வாசனை சும்மா இழுக்கும்!

மொச்சைக்காய் சீசன் வந்தாலே எல்லார் வீட்டிலேயும் வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாவது மொச்சைக்காய் குழம்பு மொச்சைக்காய் கிரேவி மொச்சைக்காய் அவியல் மொச்சை காயா தான் இருக்கும் காரணம் அதோட டேஸ்ட் அவ்வளவு ஒரு அருமையா இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய மொச்சைக்காய்க்கு நிறைய ஃபேன்ஸும் இருப்பாங்க மூணு நேரமும் அதை கொடுத்தா கூட சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க. அந்த வகையில சோயாவும் முற்றிலும் போட்டு ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல கிரேவி தான் நம்ம செய்யப் போறோம்.

-விளம்பரம்-

இந்த கிரேவிய நம்ம சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். உங்க வீட்டில மொச்சை காய் வாங்கினால் எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா செய்றீங்களா அதனால எல்லாரும் உங்களை திட்டறாங்களா அப்போ இந்த சோயா மொச்சை கிரேவி உங்களுக்காக தான். இந்த மொச்சையின் சுவையாக மட்டும் போட்டு இந்த கிரேவி செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் உங்க வீட்ல இருக்குற எல்லாரும் உங்களை பாராட்டிக்கிட்டே தான் சாப்பிடுவாங்க.

இந்த சோயா மொச்சை கிரேவிய அன்னைக்கு மட்டுமில்லாம அடுத்த நாளும் வச்சு சாப்பிட ரொம்பவே டேஸ்டா இருக்கும் அதனால செய்யும் போதே கொஞ்சம் அதிகமா கூட நீங்க செஞ்சு வச்சுக்கலாம். இதுல நம்ம அரைச்சு வச்ச மசாலாவை சேர்க்கிறதால இன்னுமே வாசனையும் சுவையும் அதிகமா இருக்கும். குழந்தைகளுக்கும் கூட இந்த கிரேவி ரொம்பவே பிடிக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கும் கூட இதை வைத்துக் கொடுக்கலாம் தயிர் சாதம் ரசம் சாதத்துக்கு எல்லாம் இந்த கிரேவி செம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சோயா மொச்சை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 2 votes

சோயா மொச்சை கிரேவி | Soya Mochai Gravy In Tamil

சோயா மொச்சை கிரேவிய அன்னைக்கு மட்டுமில்லாம அடுத்த நாளும் வச்சு சாப்பிட ரொம்பவே டேஸ்டா இருக்கும் அதனால செய்யும் போதே கொஞ்சம் அதிகமா கூட நீங்க செஞ்சு வச்சுக்கலாம். இதுல நம்ம அரைச்சு வச்ச மசாலாவை சேர்க்கிறதால இன்னுமே வாசனையும் சுவையும் அதிகமா இருக்கும். குழந்தைகளுக்கும் கூட இந்த கிரேவி ரொம்பவே பிடிக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கும் கூட இதை வைத்துக் கொடுக்கலாம் தயிர் சாதம் ரசம் சாதத்துக்கு எல்லாம் இந்த கிரேவி செம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சோயா மொச்சை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Soya Mochai Gravy
Yield: 4
Calories: 649kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் மொச்சை
  • 100 கிராம் சோயா
  • 2 தக்காளி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் தனியா
  • சிறிய துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 4 சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் மொச்சை மற்றும் சோயாவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் என்னை சேர்த்து கலந்து மிளகாய் மற்றும் தனியாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் வெங்காயம் இஞ்சி பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்
  • அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பொழுது மற்றும் வேக வைத்துள்ள சோயா மொச்சையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அனைத்தும் நன்றாக வெந்தவுடன் தயிர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான சோயா மொச்சை கிரேவி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 649kcal | Carbohydrates: 26g | Protein: 345g | Potassium: 367mg | Calcium: 34mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மீல் மேக்கர் மிளகு வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!