Home சைவம் ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட முளைக்கட்டிய பயறு சுண்டல் இப்படி செஞ்சி பாருங்க!

ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட முளைக்கட்டிய பயறு சுண்டல் இப்படி செஞ்சி பாருங்க!

பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்த முறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல் சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

-விளம்பரம்-

பொதுவாக மழைக்காலம் என்றாலே வீடுகளில் சுட சுட ஏதாவது சாப்பிடுவது வழக்கம். பொதுவாக பஜ்ஜி, போண்டா இது போன்ற ஏதாவது ஒன்றை சமைப்பதை காட்டிலும் உடலுக்கு சத்தும் அதே நேரம் சுவையும் இருக்கும் சுண்டல் சுட சுட செய்து சாப்பிடுவது மழை நேரத்தில் அமிர்தமாக இருக்கும். அந்தவகையில் ஆரோக்கியமாக ஒரு முளைகட்டியபயறு சுண்டல் ரெசிபியை இங்கு நாம் பார்ப்போம்.

 டீ குடிக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியம்மான உணவு வகைகள் செய்து கொடுத்தால் அவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் சுடச்சுட சாப்பிட விருப்பமான உணவைக் கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு முளைகட்டியபயறு சுண்டல் எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
No ratings yet

முளைகட்டியபயறு சுண்டல் | Sprouted Green Gram Stir Fry

பயறு இருந்தால் போதும். அதை முளை கட்டி இந்தமுறையில் சுண்டல் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். சுவையான இந்த முளைகட்டியபயறு சுண்டல்சுவையாக செய்திடலாம்.முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினைகுறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோஅல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு முளைகட்டியபயறுசுண்டல் எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Snack
Cuisine: tamil nadu
Keyword: Sprouted Green Gram Stir Fry
Yield: 4
Calories: 59kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் முளைகட்டிய பயறு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 காரட்
  • 1/4 தேக்கரண்டி உப்பு

செய்முறை

  • காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவுதண்ணீரை வடித்து விட்டு மூடி வைத்து விடவும். காரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
  •  மறுநாள் காலையில் பயறை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் மேலே தெளித்து விட்டு 20 நிமிடம் வேக வைக்கவும்.
  • வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் வேக வைத்த பயிறை போட்டு உப்பு போட்டு 2 நிமிடங்கள் கிளறி விடவும்.
  • பிறகு தேங்காய் துருவல், காரட் துருவல் போட்டு கிளறவும். கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
  • சத்தான முளைகட்டிய பயறு சுண்டல் ரெடி. குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்துக் கொடுக்கலா செய்ய எளிமையான, சத்தான சுண்டல்
     

Nutrition

Serving: 300g | Calories: 59kcal | Carbohydrates: 30.3g | Protein: 9.8g | Fiber: 8.7g

இதையும் படியுங்கள் : கறிக் குழம்பை மிஞ்சும் சுண்டல் குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் ஒரே வேளையில் காலியாகும்!