கறிக் குழம்பை மிஞ்சும் சுண்டல் குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் ஒரே வேளையில் காலியாகும்!

- Advertisement -

குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான குழம்புகள் உண்டு.

-விளம்பரம்-

அதில் சாம்பார், பருப்பு குழம்பு, கார குழம்பு, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, மற்றும் கத்திரிக்காய் குழம்பை மக்கள் வழக்கமாக செய்து சுவைப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு. கொண்டைக்கடலை குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் கொண்டைக்கடலை, வெங்காயம், மற்றும் தக்காளி இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம்.

- Advertisement -

கொண்டைக்கடலையில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதசத்து நிறைந்திருப்பதால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட. இப்பொழுது கொண்டைக்கடலை குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்

Print
5 from 1 vote

சுண்டல் குழம்பு | Sundal Kulambu Recipe In Tamil

கொண்டைக்கடலையில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதசத்து நிறைந்திருப்பதால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட. இப்பொழுது கொண்டைக்கடலை குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Sundal kulambu
Yield: 4
Calories: 59kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 கிராம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கிய
  • 2 கப் ஊறவைத்த சுண்டல்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தண்ணீர் தேவையான அளவு

அரைக்க

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 7 வரமிளகாய்
  • 1 பட்டை
  • 4 இலவங்கம்
  • 12 சின்ன வெங்காயம்
  • 2 பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலையை இரவு நேரம் முழுவதும் ஊற வைக்கவும். பின்கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அவை வதங்கியதும் ஆற விட்டு ஒருமிக்ஸியில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கிராம்பு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
     
  • பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் ஊற வைத்த கொண்டைக்கடலைமற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  • 2 நிமிடங்கள் கழித்து நாம் அரைத்து வைத்த விழுதை கொண்டைக்கடலையுடன் சேர்த்து கலந்து விட்டு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 4 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  • சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை குழம்பு தயார்.

செய்முறை வீடியோ

Nutrition

Serving: 300g | Calories: 59kcal | Carbohydrates: 30.3g | Protein: 9.8g | Fiber: 8.7g