Advertisement
ஸ்நாக்ஸ்

செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பனியாரம் செய்வது எப்படி ?

Advertisement

இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக இந்த செட்டிநாடு ஸ்பெசல் இனிப்பு பணியாரம் நம் வீட்டிலே செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

செட்டிநாடு இனிப்பு பணியாரம் | Sweet Paniyaram Recipe In Tamil

Print Recipe
இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள். இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக இந்த செட்டிநாடு ஸ்பெசல் இனிப்பு பணியாரம் நம் வீட்டிலே செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword sweet paniyaram, இனிப்பு பணியாரம்
Advertisement
Prep Time 8 hours 5 minutes
Cook Time 5 minutes
Total Time 8 hours 11 minutes
Servings 4 people
Calories 72

Equipment

  • பணியார சட்டி

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • ½ கப் உருட்டு உளுத்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • 3 சிறிய கரண்டி வெல்ல பாகு கரைத்து வடிகட்டியது
  • 3 டேபிள் ஸ்பூன் ரவை
  • துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

Instructions

  • முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், இந்த நான்கு பொருட்களையும் 3 இருந்து 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • ஊறியது இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது போல் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும்.
  • பிறகு அதில் பாதி மாவு தனியாக எடுத்து வெல்ல பாகு 3 கரண்டி சேர்த்து கலந்து அத்துடன் ரவை சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
  • மாவு கெட்டியாகவும் இருக்காமல் தண்ணீராகவும் இருக்கக்கூடாது.
  • பிறகு பணியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி விடவும். மிதமான தீயில் மொறு மொறுனு வெந்ததும் பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான இனிப்பு பணியாரம் தயார்.

Nutrition

Serving: 350G | Calories: 72kcal | Carbohydrates: 36g | Protein: 3g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.01mg | Potassium: 95mg | Sugar: 3.5g
Advertisement
swetha

Recent Posts

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

22 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

3 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

12 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

14 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

15 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

20 மணி நேரங்கள் ago