- Prep
- 8h 5m
- Cook
- 5 min
- Total
- 8h 11m
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள்.
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பனியாரம் செய்வது எப்படி ?
இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக இந்த செட்டிநாடு ஸ்பெசல் இனிப்பு பணியாரம் நம் வீட்டிலே செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம், இந்த நான்கு பொருட்களையும் 3 இருந்து 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறியது இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது போல் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும்.
பிறகு அதில் பாதி மாவு தனியாக எடுத்து வெல்ல பாகு 3 கரண்டி சேர்த்து கலந்து அத்துடன் ரவை சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
மாவு கெட்டியாகவும் இருக்காமல் தண்ணீராகவும் இருக்கக்கூடாது.
பிறகு பணியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி விடவும். மிதமான தீயில் மொறு மொறுனு வெந்ததும் பரிமாறவும்.
இப்பொழுது சுவையான இனிப்பு பணியாரம் தயார்.






