பொதுவாக எந்த வித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது மேலும் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம் ஆனால் இனிப்பு உணவுகளை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது
இதையும் படியுங்கள் : கிராமத்து இனிப்பு பனியாரம் செய்வது எப்படி ?
தித்திக்கும் சுவையில் பால் பனியாரம். நீங்களும் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பால் பனியாரத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். குறிப்பாக குழைந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் பால் பனியாரம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பால் பனியாரம் | Pal Paniyaram Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- ½ கப் பச்சரிசி
- ½ கப் ஊளுந்த பருப்பு
- பொரிக்க எண்ணெய் தேவையான அளவு
- 1 கப் தேங்காய் பால்
- ¼ கப் காய்ச்சிய பால்
- சர்க்கரை தேவையான அளவு
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை
- முதலில் நாம் எடுத்து கொண்ட பச்சரிசியையும், உளுந்தையும் இரண்டு மூன்று முறை அலசி பின் இரண்டையும் தனிதனியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள்.
- பின் முதலில் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் பச்சரியை சேர்த்து மையாக அரைக்கவும் பின் மாவை தோன்டி எடுத்து பின் உளுந்தை சேர்த்து அரைத்து பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பின் எண்ணெய் காய்ந்ததும், பின் நாம் அரைத்த மாவில் சிறிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து எண்ணெயில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு பவுளில் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் பொரித்தெடுத்து பனியாரத்தை இதனுடன் சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அவ்வளவு தான் சுவையான பால் பனியாரம் தயார்.