காலை உணவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து கொடுங்கள்!!

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று ம

By Prem Kumar · 1/11/2024

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காலை உணவில் சரிவிகித ஆரோக்கியம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.

இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப்போனவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இதில் இருக்கும் சத்துக்கள் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். இந்த பிரெட் டோஸ்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை செய்வதற்கு வெகு குறைவான பொருட்கள் மற்றும் குறைந்த நேரமே எடுக்கும். இதை பிரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது.

மேலும் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை மிகவும் எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அத்தோடு இவை அவசரகால கட்டங்களில் குழந்தைக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விட்டாலோ அல்லது ஆபிசுக்கு நேரமாகி விட்டாலோ, குறுகிய நேரங்களில் செய்யக்கூடிய உணவுகளில் இல்லத்தரசிகளின் டாப் சாய்ஸாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டிலேயே மக்காச்சோள பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுக்கலாம், பிரெட்டும், மக்காச்சோளம் இருந்தா போதும் சுலபமாக பிரெட் டோஸ்ட் செய்து அசத்தலாம்!

Recipes AMP · Quick view
View full