தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காலை உணவில் சரிவிகித ஆரோக்கியம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.
இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப்போனவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிடலாம். இதில் இருக்கும் சத்துக்கள் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். இந்த பிரெட் டோஸ்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை செய்வதற்கு வெகு குறைவான பொருட்கள் மற்றும் குறைந்த நேரமே எடுக்கும். இதை பிரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது.
மேலும் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை மிகவும் எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அத்தோடு இவை அவசரகால கட்டங்களில் குழந்தைக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விட்டாலோ அல்லது ஆபிசுக்கு நேரமாகி விட்டாலோ, குறுகிய நேரங்களில் செய்யக்கூடிய உணவுகளில் இல்லத்தரசிகளின் டாப் சாய்ஸாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் | Sweet Potato Bread Toast Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 சர்க்கரை வள்ளிக்கிழங்கு
- 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 3 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை
- 2 முட்டை
- 2 டேபிள் ஸ்பூன் பால்
- 8 பிரெட் துண்டுகள்
- 1/4 டீஸ்பூன் பட்டை தூள்
செய்முறை
- முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சிறிது நிமிடங்கள் நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால் மற்றும் பட்டை தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின் பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நீக்கி விட்டு லேசாக தேய்த்து அதன் நடுவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கலவையை வைத்து உருளையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் பிரெட் உருண்டைகளை முட்டை கலவையில் நனைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட் ரோலை சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சக்கரை வள்ளிக்கிழங்கு டோஸ்ட் தயார். இதன் மேல் நாட்டு சர்க்கரை தூவி பரிமாறவும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்டிலேயே மக்காச்சோள பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுக்கலாம், பிரெட்டும், மக்காச்சோளம் இருந்தா போதும் சுலபமாக பிரெட் டோஸ்ட் செய்து அசத்தலாம்!