Home ஸ்வீட்ஸ் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில்...

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு. இது புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

-விளம்பரம்-

இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. அந்த வகையில் இந்த கிழங்கு இரத்தம் சுத்திகரிக்க, இதயத்தை பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் சுவையாக இருக்கும்.

வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விசேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு இந்த லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.

Print
No ratings yet

சர்க்கரை வள்ளி் கிழங்கு லட்டு | Sweet Potato Ladoo Recipe In Tamil

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு. இது புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் சுவையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: evening, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: Sweet Potato Ladoo
Yield: 4 People
Calories: 162kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி சர்க்கரை வள்ளிக்கிழங்கு
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  • 1/4 கப் வெல்லம்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய ட்ரை நட்ஸ்

செய்முறை

  • முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி விட்டு ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் சர்க்கரை வள்ளிக் கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பின் நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு தயார்.‌

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 3.9g | Protein: 6.3g | Fat: 3.7g | Sodium: 142mg | Potassium: 525mg | Fiber: 9.9g | Sugar: 9.3g | Vitamin A: 109IU | Vitamin C: 85mg | Calcium: 38mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : லட்டு சாப்டனும்னா இனிமேல் கடைக்கு போய் வாங்கி சாப்பிடாம வீட்டிலயே சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!