Advertisement
சைவம்

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

Advertisement

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை ரோஸ்ட் செய்து சுவைக்கலாம். கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு.

ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை ரோஸ்ட் செய்வது எப்படி என்று காண உள்ளோம்.

Advertisement

இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ரோஸ்ட் ஆனது சாம்பார் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. அந்த வகையில் இந்த கிழங்கு இரத்தம் சுத்திகரிக்க, இதயத்தை பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு பிடிக்காதவர்கள் என்று சொல்பவர்கள் கூட இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட்டை விட்டு வைக்க மாட்டார்கள். அப்படி வீட்டில் சர்க்கரை வள்ளி கிழங்கு இருந்தால் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட்டை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. ஒரு வாய் சாதம் எக்ஸ்ட்ராவாக போகும்.

சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் | Sweet Potato Roast Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் மதிய வேளையின் போது சாம்பார் அல்லது கார குழம்பிற்கு சைடு டிஷ்ஷாக அதை ரோஸ்ட் செய்து சுவைக்கலாம். கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான
Advertisement
கிழங்கு. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கனை ரோஸ்ட் செய்வது எப்படி என்று காண உள்ளோம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Sweet Potato Roast
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 162

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

  • 4 சர்க்கரை வள்ளி கிழங்கு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதன் தோலை நீக்கி விட்டு வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் இதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் ஊற வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 162kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.3g | Fat: 2g | Sodium: 25mg | Potassium: 152mg | Fiber: 3.9g | Vitamin A: 55IU | Vitamin C: 79mg | Calcium: 45mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : ருசியான சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இந்த பஜ்ஜியின் சுவையே தனி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

7 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

15 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago