புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் இதுபோன்ற கலவை சாதங்கள் பலருக்கும் மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன. ஆனால் அனைவரும் இது போன்ற உணவுகளை நினைத்து உடனே சமைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் இவற்றை சமைப்பதற்கான பக்குவம் அவர்களுக்கு சரியாக தெரிந்திருக்காது. ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் முறைகளை சரியாக செய்தால் பேச்சுலராக இருந்தாலும் ஈசியாக புளியோதரை சாதத்தை சமைத்து விடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இக்காலத்தில் மக்கள் அதிகளவு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இப்படிபட்ட சமயங்களில் நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் தயாரித்து பயணங்களின் போது சாப்பிடும் படியான உணவாக புளியோதரை இருக்கிறது. வீட்டில் செய்து கொண்டு போவதால் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.சுவையான புளியோதரையை தயாரிக்கும் வழிமுறையை இங்கு காண்போம்.
புளியோதரை | Tamarind Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் அரிசி
- 100 கிராம் புளி
- 100 மில்லி நல்லெண்ணெய்
- உப்பு தேவையானஅளவு
- 10 காய்ந்த மிளகாய்
- 1 விரளிமஞ்சள் உடைத்துக் கொள்ளவும்
- 1 டேபிள்ஸ்பூன் மல்லி
- 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
தாளிப்பதற்கு
- 6 காய்ந்த மிளகாய் கிள்ளி வைக்கவும்
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு
- 2 டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- கறிவேப்பிலை சிறிதளவு
- பெருங்காயத்தூள் சிறிதளவு
செய்முறை
- வறுக்கக் கொடுத்துள்ளபொருள்களை எண்ணெய்விட்டு தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
- அரிசியை ஒரு பங்குக்கு இரு பங்கு தண்ணீரவிட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
- புளியை 300 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, கிள்ளிய காய்ந்த மிளகாயைப் போட்டு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
- பின்னர்,புளிக்கரைலைச் சேர்த்து. நன்றாகக் கொதித்து சிறிது கெட்டியாக வந்ததும் வறுத்துப் பொடித்ததைப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டு கெட்டியாக வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
- அகலமான பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு எண்ணெய் சிறிதளவுவிட்டு புளிக்காய்ச்சலைச் சேர்த்து நன்கு கலக்கவும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கலந்துவைத்து சாப்பிட்டால் நன்கு ஊறி ருசியாக இருக்கும்.