ருசியான தந்தூரி சிக்கன் சுலபமாக இப்படி வீடடிலே செய்யலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

தந்தூரி சிக்கன் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. தந்தூரி சிக்கன் இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் :ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!!

- Advertisement -

தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். தந்தூரி சிக்கனை ஹோட்டலில் வாங்கினால் விலை அதிகம் இருக்கும். விலை அதிகமாக இருக்கிறதே என்று சாப்பிடாமலும் இருக்க முடியாது. வீட்டிலேயே மணக்க மணக்க இந்த தந்தூரி சிக்கனை செய்து சாப்பிடலாமாம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என பார்க்கலாம்.

Print
No ratings yet

தந்தூரி சிக்கன் | Tandoori Chicken Recipe in Tamil

தந்தூரி சிக்கன் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. தந்தூரி சிக்கன் இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். வீட்டிலேயே மணக்க மணக்க இந்த தந்தூரி சிக்கனை செய்து சாப்பிடலாமாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: tandoori chicken
Yield: 4 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 4 கோழி கால்கள்
  • 1/2 கப் கெட்டியான தயிர்
  • 1/4 கப் எலுமிச்சை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் தந்தூரி சிக்கன் மசாலா
  • 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி              
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/4 டீஸ்பூன் கரம்
  • 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டீஸ்பூன் ரெட் கலர்
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • சிக்கனை கழுவி, சிக்கனில் இருக்கும் தண்ணீரை நன்றாக வடித்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் மேலே கொடுக்கப்பட்ட மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும்.
  • பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மசாலாவை எடுத்து சிக்கன் துண்டுகளின் மீது தடவ வேண்டும்.
  • மசாலா தடவிய சிக்கனை பிரிட்ஜில் 2மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் 2 சிக்கன் துண்டுகள் போட்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றி விட்டு வேக வைக்கவும்.
  • உடனே திருப்பி விட்டால் மசாலா உதிர்ந்து விடும். இரண்டு புறங்களிலும் நன்றாக சிக்கன் வேகும் வரை மாற்றி,மாற்றி போட்டு பொரிக்கவும்.
  • இதேபோல் மீதி இருக்கும் துண்டுகளையும் பொரித்து எடுக்கவும்.
  • 3சிரட்டை துண்டுகளை அடுப்பில் மீடியம் தீயில் வைத்து எரித்து தணல் கொண்டு வரவும்.
  • பின்பு வேறு கடாயில்,பொரித்த துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி நடுவில் ஒரு சிறிய பாத்திரத்தில் தணல் கரித்துண்டுகளை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மூடி போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும்.
  • இவ்வாறு வைக்கும் பொழுது நமக்கு சாப்பிடும்பொழுது சுவையாக இருக்கும்.
  • அவ்வளவுதான். சுவையான ஓவன் இல்லாமல் செய்த தந்தூரி சிக்கன் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 128kcal | Carbohydrates: 13.91g | Protein: 26g | Fat: 2.7g | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg