மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான மற்றும் சுவையான இந்த மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள்!!
சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான மரவள்ளிக்
சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ். பள்ளி விடுமுறை என்றாலே வீட்டிலிருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதிற்கு விதவிதமான ஸ்நாக்ஸ்கள் கேட்பார்கள். அதுவும் தற்போதுள்ள குழந்தைகள் பீட்சா, பர்கர் என்று சாப்பிடுதற்குத்தான் விருப்பப்படுகிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் பால்ஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் விஷேசம் என்றால், யோசிக்கவே வேண்டாம், இந்த மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து அசத்துங்கள். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாகவும், சிக்கனுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும். உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் இது இடம்பெறும்போது அந்நிகழ்ச்சிகளும் அழகாகும்.
இதை ஸ்டாட்டராக எடுத்துக்கொள்ளலாம். மரவள்ளிக் கிழங்கு கலவையுடன், உள்ளே ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதை கடிக்கும்போது சீஸின் சுவை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் சேர்ந்து உங்களுக்கு வித்யாசமான உணர்வைக் கொடுக்கும். உங்கள் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு எடுத்து பொறித்து கொடுக்கலாம். சுடசுட சீஸ் சுவையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு உங்கள் விருப்பத்திற்கு எதில் வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!