- Advertisement -
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சத்தானதும் கூட, மற்றும் சுவையாகவும் இருக்கும், அத்தகைய மரவள்ளி கிழங்கை வைத்து பாயசம் செய்து வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மரவள்ளி கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பலருக்கும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பலாப்பழ பாயசம் செய்வது எப்படி ?
- Advertisement -
தெரியாது, இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயசம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டுள்ளது அதனை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களே. அவ்வளவு சுவையாக இருக்கும்.
மரவள்ளிக் கிழங்கு பாயசம் | Maravalli Kizhangu Payasam In Tamil
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சத்தானதும் கூட, மற்றும் சுவையாகவும் இருக்கும், அத்தகைய மரவள்ளி கிழங்கை வைத்து பாயசம் செய்து வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த மரவள்ளி கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது, இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயசம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Yield: 4 people
Calories: 215kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ மரவள்ளிக்கிழங்கு
- 3 கப் பால்
- 1 கப் சர்க்கரை
- 8 நெய்யில் வறுத்த முந்திரி
- 1 சிட்டிகை ஏலக்காய்த் தூள்
- 1 சிட்டிகை குங்குமப்பூ
- 1 கப் தேங்காய்ப் பால்
செய்முறை
- முதலில் மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
- அடுத்து பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- நன்றாக கொதித்த பிறகு மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு, முந்திரி, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி தேங்காய் பால் சேர்த்துப் பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம் தயார்.
Nutrition
Serving: 400gram | Calories: 215kcal | Carbohydrates: 31g | Protein: 9g | Saturated Fat: 0.2g | Cholesterol: 5mg | Sodium: 2mg | Potassium: 362mg | Fiber: 12g | Sugar: 4g | Calcium: 11mg