- Advertisement -
நீங்கள் எப்பொழுதும் போல் பாசிப்பருப்பு பாயாசம், அரிசி பாயசம், சேமியா பாயாசம், பால் பாயாசம் என ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பலாப்பழம் பாயாசத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சேமியா பாயசம் செய்வது எப்படி ?
- Advertisement -
சாப்பிடுவார்கள் ஒரு மாறுதலாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பலாப்பழம் பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பலாப்பழ பயாசம் | Palapala Payasam Recie in Tamil
எப்பொழுதும் ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பலாப்பழம் பாயாசத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு மாறுதலாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Yield: 4 people
Calories: 225kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 20 பலாப்பழம்
- 2 கப் தேங்காய்பால்
- 150 கிராம் வெல்லம்
- ½ tsp ஏலக்காய் தூள்
- 2 tbsp நெய்
- 10 முந்திரி பருப்பு
- 6 பிஸ்தா
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும் பினா அதிலிருந்து ஒரு பலாப்பழத்தை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொட்டை நீக்கிய பலாப்பழத்தை சேர்த்து நன்றாக வேக வைத்து பின் குளிர வைத்து கொள்ளுங்கள்.
- பின் குளிர வைத்த பலாபழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
- பின் வெல்லம் உருகி நன்றாக கரைந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்தது அதில் நெய் ஊற்றி அதில் முந்திரி, பிஸ்தாவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதை சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன்.
- அதில் நாம் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான தித்திக்கும் பலாப்பழ பாயாசம் தயாராகிவிட்டது.
Nutrition
Serving: 800gram | Calories: 225kcal | Carbohydrates: 43g | Protein: 21g | Fat: 3g | Saturated Fat: 0.1g | Sodium: 4mg | Potassium: 362mg | Fiber: 2g | Sugar: 8.5g | Calcium: 21mg