சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ். பள்ளி விடுமுறை என்றாலே வீட்டிலிருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதிற்கு விதவிதமான ஸ்நாக்ஸ்கள் கேட்பார்கள். அதுவும் தற்போதுள்ள குழந்தைகள் பீட்சா, பர்கர் என்று சாப்பிடுதற்குத்தான் விருப்பப்படுகிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் பால்ஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் விஷேசம் என்றால், யோசிக்கவே வேண்டாம், இந்த மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ் செய்து அசத்துங்கள். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாகவும், சிக்கனுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும். உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் இது இடம்பெறும்போது அந்நிகழ்ச்சிகளும் அழகாகும்.
இதை ஸ்டாட்டராக எடுத்துக்கொள்ளலாம். மரவள்ளிக் கிழங்கு கலவையுடன், உள்ளே ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதை கடிக்கும்போது சீஸின் சுவை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் சேர்ந்து உங்களுக்கு வித்யாசமான உணர்வைக் கொடுக்கும். உங்கள் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு எடுத்து பொறித்து கொடுக்கலாம். சுடசுட சீஸ் சுவையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு உங்கள் விருப்பத்திற்கு எதில் வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ் | Tapioca Cheese Balls Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 மரவள்ளிக் கிழங்கு
- சீஸ் துண்டுகள் தேவையான அளவு
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 துருவிய கேரட்
- 2 பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர்
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
- 1 டேபிள் ஸ்பூன் பொடித்த வேர்க்கடலை
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- முதலில் மரவள்ளிக் கிழங்கை குக்கரில் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக வைத்து அதனை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதனுடன் வெங்காயம், துருவிய கேரட், பச்சை மிளகாய், அரிசி மாவு, கார்ன் ப்ளவர், மாவு, கொத்தமல்லி தழை, பொடித்த வேர்க்கடலை, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் சீஸ் துண்டுகளை மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பிரட்டி வைத்து கொள்ளவும்.
- பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் இந்த சீஸ் உருண்டைகளை வைத்து மூடி விடவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!