ருசியான மாங்காய் பச்சடி இப்படி ஒரு தரம் கல்யாண வீட்டு ஸ்டைலில் ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பச்சை மாங்காய் மரத்தில் பார்த்தாலே நாவில் நீர் சுரக்கும் அளவிற்கு விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி மாங்காய்களை தோட்டங்களில் தெரியாமல் பறித்து காக்காய் கடி கடித்து உண்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள். திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம் என்று கூறிக்கொண்டு மாங்காய் பறித்து மாட்டி கொண்டவர்கள் பலர். இப்பொழுதெல்லாம் வளர்ந்து விட்டவர்கள் தங்களது சிறுவயது ஏதோ ஒரு இடத்தில் ஆவது மரத்திலிருந்து மாங்காயை பறித்து அப்படியே உப்பு மிளகாய் தூள் சேர்த்து உண்டு மகிழ்ந்து இருப்பார்கள். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். இப்படி அந்த மாங்காய் மீது உள்ள விருப்பம் என்பது எந்த வயதிலும் குறைவதே இல்லை. அப்படிப்பட்ட மாங்காயில் நாம் குழம்பு, ஊறுகாய், தொக்கு, ஏன் வெறும் உப்பில் அறிந்து போட்டு கூட சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

கல்யாண விருந்துகளில் வைக்கப்படும் மாங்காய் பச்சடி அனைவரின் நாக்கிலும் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த சுவையான மாங்காய் பச்சடியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கின்றோம். மாங்காய் சீசனில் கல்யாணங்களில் நிச்சயமாக இருக்கும் ஒரு உணவாக இந்த மாங்காய் பச்சடி இருக்கிறது. இந்த மாங்காய் பச்சடியை  சித்திரை ஒன்று அன்று சிலர் செய்து உண்பார்களாம். காரணம் இந்த மாங்காய் பச்சடியில் அறுசுவையும் கலந்திருப்பது தான்.

- Advertisement -

ஒரே உணவு பொருள் எப்படி அறுசுவையும் கலந்திருக்கும் என்று ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாங்காய் பச்சடியை நாவில் வைத்தவுடன் நமக்கு முதலில் எந்த சுவை உணர்கிறது என்பதை கண்டறியவே சில நிமிடங்கள் ஆகும். அப்படிப்பட்ட மாங்காய் பச்சடியை எப்படி ருசியாக சமைத்து உன்னலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் வாருங்கள். சுவையான மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .

Print
No ratings yet

மாங்காய் பச்சடி | Mango Pachadi Recipe In Tamil

கல்யாண விருந்துகளில் வைக்கப்படும் மாங்காய் பச்சடி அனைவரின் நாக்கிலும் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த சுவையான மாங்காய் பச்சடியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கின்றோம். மாங்காய் சீசனில் கல்யாணங்களில் நிச்சயமாக இருக்கும் ஒரு உணவாக இந்த மாங்காய் பச்சடி இருக்கிறது. இந்த மாங்காய் பச்சடியை  சித்திரைஒன்று அன்று சிலர் செய்து உண்பார்களாம். காரணம் இந்த மாங்காய் பச்சடியில் அறுசுவையும் கலந்திருப்பது தான். சுவையான மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: mango pachadi
Yield: 4
Calories: 493kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 12 கப் வெல்லம்
  • 12 கப் தேங்காய் துருவல்

தாளிக்க

  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 2 காய்ந்தமிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் நல்ல செங்காயாக ஒரு மாங்காயை எடுத்து அதை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மாங்காயின் மேல் உள்ள தோலை செதுக்கி எடுத்து விடவும். மாங்காய் உள்ளே இருக்கும் சதை பகுதியை மெலிதாக செதுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து செதுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின் வேறு ஒரு பாத்திரத்தில்  வெல்லம்சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டியால் வடிகட்டி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • பின் வெந்து கொண்டு இருக்கும் மாங்காயை கரண்டியால் மசித்து விட்டு வடிகட்டி வைத்துள்ள வெல்லம சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து  மாங்காயுடன்வெல்லம்  சேர்த்துநன்றாக வெந்து திக்காக மாறியது. அடுப்பை கம்மியான தீயில்  வைத்துவிட்டுகிளறி விட வேண்டும்.
     
  • பின்அடுப்பில் ஒரு வானெலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு, காய்ந்தமிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளிப்புகளை வெந்து கொண்டிருக்கும் மாங்காயில் சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் ருசியான மாங்காய் பச்சடி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg