காரசாரமான மசால் தோசை காலை டிபனுக்கு இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!

- Advertisement -

என்னதான் காலை உணவுல நிறைய வெரைட்டிஸ் வந்தாலும் நம்ம தென்னிந்தியா கூட காலை உணவான இட்லியும் தோசையையும் அடிச்சுக்க எதாலையும் முடியாது. அதுலயும் ஒரு சிலருக்கு இட்லி கூட பிடிக்காம இருக்கும் ஆனா மொறு மொறுன்னு சாப்பிடக்கூடிய தோசை பிடிக்காமல் இருக்காது. மொறு மொறுன்னு சுட்ட தோசை கூட சாம்பார் சட்னி எதுவும் சேர்த்து சாப்பிட்டாலும் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும்.

-விளம்பரம்-

தோசையில நிறைய வெரைட்டிஸ் இருக்கு. பொடி தோசை, காளான் தோசை, காலிஃப்ளவர் தோசை, ரவா தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, ஏன் இப்பல்லாம் கறி தோசை கூட ரொம்பவே பேமஸ் ஆயிருக்கு. என்னதான் இவ்வளவு தோசை வரைடீஸ் இருந்தாலும் நம்ம ஒரு மசால் தோசைய அடிச்சுக்கவே முடியாது. அவ்வளவு ஒரு ருசியா இருக்கும். காரசாரமா அந்த மசால் தோசை கூட சட்னி சாம்பார் வைத்து சாப்பிடும்போது சொர்க்கமா இருக்கும்.

- Advertisement -

பெரும்பாலும் எல்லாரும் கடைகள்ல தான் மசாலா தோசை வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா நம்ம வீட்லையே ரொம்ப டேஸ்டா நம்மளால மசால் தோசை செய்ய முடியும். இந்த மசாலா தோசை கூட ஏதாவது ஒரு சட்னி வச்சு கொடுத்துட்டாங்க போதும் குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் இந்த மசாலா தோசைக்கும் சைட் டிஷ் இல்லாம கூட சாப்பிடுவாங்க. ஆனா அதுவும் உண்மைதாங்க இந்த மசாலா தோசைக்கு சைட் டிஷ் இல்லனா கூட ரொம்பவே டேஸ்ட்டா தான் இருக்கும். இப்படி ஒரு டேஸ்டான மசாலா தோசை வீட்டிலேயே எப்படி ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரா செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

மசால் தோசை | Masala Dosai Recipe In Tamil

பெரும்பாலும் எல்லாரும் கடைகள்ல தான் மசாலா தோசை வாங்கிசாப்பிடுவாங்க. ஆனா நம்ம வீட்லையே ரொம்ப டேஸ்டா நம்மளால மசால் தோசை செய்ய முடியும்.இந்த மசாலா தோசை கூட ஏதாவது ஒரு சட்னி வச்சு கொடுத்துட்டாங்க போதும் குழந்தைங்க ரொம்பவேவிரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் இந்த மசாலா தோசைக்கும் சைட் டிஷ் இல்லாம கூட சாப்பிடுவாங்க.ஆனா அதுவும் உண்மைதாங்க இந்த மசாலா தோசைக்கு சைட் டிஷ் இல்லனா கூட ரொம்பவே டேஸ்ட்டாதான் இருக்கும். இப்படி ஒரு டேஸ்டான மசாலா தோசை வீட்டிலேயே எப்படி ஹோட்டல் ஸ்டைலில்சூப்பரா செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Masala Dosai
Yield: 4
Calories: 141kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தோசை மாவு
  • 1 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் நறுக்கிய பரங்கிக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கையளவு கொத்தமல்லி இலைகள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் நறுக்கிய பரங்கிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு பரங்கிக்காய் சிறிதளவு வெந்தவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் உப்பு கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை மிளகாய் தூள் அனைத்தும் சேர்த்து ஐந்து நிமிடம் வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
  • தோசை கல்லில் உங்களுக்கு தேவையான அளவில் தோசை ஊற்றி ஒரு பக்கம் நன்றாக வெந்தவுடன் செய்து வைத்துள்ள மசாலாவில் இருந்து சிறிதளவு எடுத்து தோசையில் நன்றாக பரப்பி விட்டு திருப்பி போடாமல் தோசையை மூடி எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான அட்டகாசமான மணக்க மணக்க மசால் தோசை தயார்.

Nutrition

Serving: 2nos | Calories: 141kcal | Carbohydrates: 17g | Protein: 5.4g | Vitamin A: 49.2IU | Calcium: 25mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ஆந்திர ஸ்டைல் பென்னே தோசை சட்னி இந்த முறையில் செய்து அசத்துங்கள்!