காடை கிரேவியை ஒரு முறை இப்படி கறி குழம்பு சுவையில் செஞ்சு பாருங்க! குழம்பு கொதிக்கும் போதே பசியை தூண்டும்!

- Advertisement -

 காடை இறைச்சியை அதிக மக்களுக்கு சுவையாக சமைக்க தெரியாத ஒரு உணவாக இன்றளவும் உள்ளது. அதனால் ஹோட்டல் சென்றால் மட்டும் வாங்கி சாப்பிட்டு கொள்வார்கள். அதனால் நாம் இன்று காடையை வைத்து காடை கிரேவி செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.  காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது.

-விளம்பரம்-

குறைந்த கொழுப்புள்ள காடை, கோழி பிரியர்களுக்கு பரிசு. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. பிராய்லர் கோழியில் அதிக அளவு உடலுக்கு கேடான கெமிக்கல் சேர்க்கப்படுவதால், ஆயுர்வேத , ஹோமியோ மருத்துவத்தில் காடை சாப்பிடலாம் என்றும் அதில் இருக்கும் ஆரோக்கியம் மருத்துவ ரீதிஞாக உஹவுகிறது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த காடை கிரேவி ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள். சுலாமாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காடை கிரேவியை  செய்து சாப்பிட்டு பாருங்கள்.

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காடை கிரேவி எப்படி செய்வது,என இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

காடை கிரேவி | Quail Gravy Recipe In Tamil

பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறுஅசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த காடை கிரேவி ஒரு முறையேனும் சமைத்து,ருசி பார்த்துவிடுங்கள்.  காடை இறைச்சியை அதிக மக்களுக்கு சுவையாக சமைக்க தெரியாதஒரு உணவாக இன்றளவும் உள்ளதுசுலாமாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காடை கிரேவியை  செய்து சாப்பிட்டு பாருங்கள்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Quail Gravy
Yield: 4
Calories: 789kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 காடை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை

அரைக்க

  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை

அரைக்க 2

  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
  • தேங்காய்த் துருவல் மற்றும் சோம்பினை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் வெங்காயம், சேர்த்து பொன்னிறமானதும், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் இதனுடன் தூள் வகைகள், காடை துண்டுகள், அரைத்த தேங்காய் விழுதுகள், உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு, மூடி வேக விடவும்,
  • குக்கர் என்றால் 2 விசில் போதுமானது.பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்க்கவும்.
  • வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும், சுவையான காடை கிரேவி ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 789kcal | Carbohydrates: 34g | Sodium: 352mg | Potassium: 456mg | Fiber: 4g | Calcium: 36mg