Home சைவம் பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி வீட்டில் இப்படித்தான் செய்வீர்கள்!

பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி வீட்டில் இப்படித்தான் செய்வீர்கள்!

பொதுவாய் எல்லாருக்கும் காரசாரமா வெறும் சாதத்தில் குழம்பு ஊத்தி சாப்பிடுவதற்கு ரொம்பவே பிடிக்கும் அதுலயும் காரக்குழம்பு சாப்பிடுவதற்கு வெறும் வடிச்ச சாதம் இருந்தா போதும் ரெண்டு தட்டு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு கார குழம்பு ருசியா இருக்கும். பெரியவங்களுக்கு தான் புடிக்கும் அப்படின்னு எல்லாம் கிடையாது சின்ன குழந்தைகள் இருந்து கூட இந்த கார குழம்பு பிடிக்கும்.

-விளம்பரம்-

நம்ம எல்லாரும் காய்ந்த சுண்டைக்காய் குழம்பு அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பச்சை சுண்டைக்காய் கார குழம்பு இன்னும் ருசியாகவும் நிறைய சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வயித்துல இருக்க பூச்சிகளை கொன்று வைத்த நல்லா சுத்தப்படுத்துவதற்கு பச்சை சுண்டைக்காய் உதவும். இந்த பச்சை சுண்டைக்காய் ல சட்னி கூட செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனால் அதைவிட கார குழம்பு வச்சு சாப்பிட்டா ருசி அருமையா இருக்கும்.

அதனால பச்சை சுண்டகால கார குழம்பு வச்சு உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் கொடுங்க முக்கியமா சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கும் கூட குடுங்க ஈஸியா சாப்பிடுவாங்க. அதுகூட கொஞ்சம் சுட்ட அப்பளமும் வெச்சு சாப்பிட்டா இன்னும் ருசி அதிகமாவே இருக்கும். இப்ப வாங்க பச்சை சுண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

சுண்டைக்காய் காரக்குழம்பு | Sundakkai Kaarakulambu Recipe In Tamil

காய்ந்த சுண்டைக்காய் குழம்பு அதிகமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பச்சை சுண்டைக்காய் கார குழம்பு இன்னும் ருசியாகவும் நிறைய சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். வயித்துல இருக்க பூச்சிகளை கொன்று வைத்த நல்லா சுத்தப்படுத்துவதற்கு பச்சை சுண்டைக்காய் உதவும். இந்த பச்சை சுண்டைக்காய் ல சட்னி கூடசெஞ்சு சாப்பிடுவாங்க. ஆனால் அதைவிட கார குழம்பு வச்சு சாப்பிட்டா ருசி அருமையா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Kulambu, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Sundakkai Kaarakulambu
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் பச்சை சுண்டைக்காய்
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 20 பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • மல்லி இலைகள் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • புளி எலுமிச்சைபழ அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சை சுண்டைக்காயை உடைத்து உள்ளே உள்ள விதைகளை ஒரு 80 சதவீதம் நீக்கிக் கொள்ள வேண்டும் பிறகு அதனை இரண்டு முதல் மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும்
  • கழுவிய சுண்டக்காய்களை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெந்தயம் சின்ன வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • அதன் பிறகு அதில் தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் பெருங்காயம் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் இப்போது இதில் பச்சை சுண்டை காய் போட்டு அனைத்தும் நன்றாக வதங்கும் வரை கிளறவும்
     
  • இப்பொழுது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து க் கொள்ளவும் குழம்புமிளகாய் தூள் இல்லாதவர்கள் மல்லித்தூள் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் மிளகாய்த்தூள் 3/4 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • கொதித்த உடன் கரைத்து வைத்துள்ள புளியை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • இறுதியாக மல்லி இலைகளையும் சிறிதளவு நல்லெண்ணெயும் சேர்த்து இறக்கினால் பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு மணக்க மணக்க தயார்
     
  • வெறும் சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த காரக்குழம்பை செய்து கொடுத்து அசத்துங்கள்

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg