Advertisement
சைவம்

மணமணக்கும் சுவையான தக்காளி பாத் செய்வது எப்படி ?

Advertisement

குழந்தைகளுக்கு மத்திய உணவாக தக்காளி சாதம் வழக்கம் போல் செய்து கொடுப்பதற்கு பதிலா இப்படி புதுவிதமான செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

Advertisement

இந்த ரெசிபி நீங்கள் சுலபமாகவும் குறைவான நேரத்திலும் செய்துவிடலாம். அதனால் இன்று இந்த தக்காளி பாத் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்..

தக்காளி பாத் | Tomato Bhat Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மத்திய உணவாக தக்காளி சாதம் வழக்கம் போல் செய்து கொடுப்பதற்கு பதிலா இப்படி புதுவிதமான செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி நீங்கள் சுலபமாகவும் குறைவான நேரத்திலும் செய்துவிடலாம்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword tomato bath, தக்காளி பாத்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 2 people
Calories 126

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 3 பல் பூண்டு
  • இஞ்சி சிறிய துண்டு (தோல் சீவியது)
    Advertisement
  • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  • புதினா நறுக்கியது கொஞ்சம்
  • கொத்தமல்லி தழை நறுக்கியது கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 2 கப் உதிர் உதிராக வடித்த சாதம்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும்.
  • இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கி சேர்க்கவும்.
  • எல்லாமாக சேர்த்து வெந்ததும் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும்.
  • பிறகு உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்து கிளறினால் தக்காளி பாத் தயார்.

Nutrition

Calories: 126kcal | Carbohydrates: 20g | Protein: 2.3g | Saturated Fat: 0.3g | Sodium: 9.2mg | Potassium: 173mg | Fiber: 1.3g
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

8 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

9 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

11 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

16 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

19 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

20 மணி நேரங்கள் ago