- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
குழந்தைகளுக்கு மத்திய உணவாக தக்காளி சாதம் வழக்கம் போல் செய்து கொடுப்பதற்கு பதிலா இப்படி புதுவிதமான செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு செய்வது எப்படி ?
இந்த ரெசிபி நீங்கள் சுலபமாகவும் குறைவான நேரத்திலும் செய்துவிடலாம். அதனால் இன்று இந்த தக்காளி பாத் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்..
Ingredients
Method
முதலில் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மேலும் வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, பூண்டு, இஞ்சியை நசுக்கி சேர்க்கவும்.
எல்லாமாக சேர்த்து வெந்ததும் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து வதக்கி, கரம் மசாலா சேர்த்து இறக்கிவிடவும்.
பிறகு உதிராக வடித்த சாதத்தை அதில் சேர்த்து கிளறினால் தக்காளி பாத் தயார்.






