- Advertisement -
இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி துவையல் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அப்றம் சட்னியும் வேண்டாம், சாம்பாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுங்க. ஏனென்றால் அவ்வளவு அருமையான சுவையில் இந்த துவையல்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து சுண்டைக்காய் துவையல் இனி இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
இருக்கும். எப்பொழுது ஒரே மாரி சாம்பார், சட்னி போன்று சாப்பிடாமல் இது போன்று துவையல் செய்து சாப்பிடுங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
தக்காளி துவையல் | Thakkali Thogayal Recipe In Tamil
இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி துவையல் ஒரு முறை இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அப்றம் சட்னியும் வேண்டாம், சாம்பாரும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுங்க. ஏனென்றால் அவ்வளவு அருமையான சுவையில் இந்த துவையல் இருக்கும். எப்பொழுது ஒரே மாரி சாம்பார், சட்னி போன்று சாப்பிடாமல் இது போன்று துவையல் செய்து சாப்பிடுங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 80kcal
Equipment
- 1 கடாய்
- 1 ம
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
- 1 டேபிள் ஸ்பூன் தனியா
- ¼ டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 5 வர மிளகாய்
வதக்குவதற்கு:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 5 தக்காளி நறுக்கியது
- 3 பச்சைமிளகாய்
- 2 பீஸ் இஞ்சி
- 5 பல் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
- கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
- புளி நெல்லிக்காய் அளவு
- 1 டீஸ்பூன் வெல்லம்
செய்முறை
- முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு வறுத்து ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து வதக்கி சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.
- பிறகு அதில் கொத்தமல்லி இலை, மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
- ஆறியதும் முதலில் அரைத்த பவுடரில் இதையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
- இப்பொழுது சுவையான தக்காளி துவையல் தயார்.
Nutrition
Serving: 545G | Calories: 80kcal | Carbohydrates: 0.5g | Protein: 3g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 51mg | Sugar: 0.5g | Vitamin A: 13IU