நீங்கள் வாங்கும் தங்க நகைகள் உங்களிடமே நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

உலகம் முழுவதும் அதிகமானவர்களால் விரும்பப்படும் உலோகமாக தங்கம் உள்ளது. தங்க நகை அணிய அனைவருமே விரும்புகின்றனர். தங்க நகை அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கத்தை அந்தஸ்துக்காக வாங்குபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தை மகளின் திருமணத்திற்காக வாங்கும் பெற்றோர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தங்கம் எல்லோர் வீட்டிலும் எளிதில் தங்கிவிடுவதில்லை.

-விளம்பரம்-

தங்கத்தில் முதலீடு செய்தால் அவசரத்திற்கு உதவும் என்பார்கள். தங்கத்தை அணியவும், வாங்கவும் விரும்பாதவர்கள் ரொம்ப குறைவு. சிலரிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். சிலருக்கோ எவ்வளவு முயன்று குண்டுமணி தங்கம் கூட வாங்க யோகம் இருக்காது. தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மிக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும்.

- Advertisement -

தங்கம் வாங்க உகந்த நாட்கள்

பூச நட்சத்திரம், மகர சங்கராந்தி, யுகாதி, அக்ஷய திரிதியை, நவராத்திரி, தசரா, தந்தேராஸ், தீபாவளி, பலிபிரதிபடா ஆகிய நாட்கள் தங்கம் வாங்க மிகவும்‌‌ உகந்த நாட்களாக கருதப்படுகிறது. சங்கராந்தி அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. வருடத்தின் முதல் விழாவாக வருவது சங்கராந்தி தான். விவசாயிகள் வேளாண் பணியை துவங்கும் இந்த நாள் அதிவிசேஷமான சுபமுகூர்த்த தினமாக கருதப்படுகிறது. அதனால் தான் மகர சங்கராந்தி தங்கம் வாங்க ஏற்ற நாளாக சொல்கிறார்கள்.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிவரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சய திருதியை அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று நம்பப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

சனிக்கிழமை அன்று ‌தங்கம் வாங்கலாமா?

நம்மில் பலருக்கும் சனிக்கிழமைகளில் தங்கம் வாங்கலாமா என்ற‌ கேள்வி எப்போதும் இருக்கும். சனிக்கிழமையில் கூட புதிதாக தங்க நகைகள் வாங்கலாம். சனி பெருக்கு என்று சொல்வது அதனால்தான். சனிக்கிழமைகளில் தங்கம் வாங்கினாலும் அந்த தங்கம் நம்முடனேயே தங்கும். வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணிய சனிக்கிழமை மிக நல்லது.

-விளம்பரம்-

அமாவாசை அன்று நகைகள் வாங்கலாமா?

தங்கம் மகாலட்சுமியின் அம்சம். அமாவாசை ஒரு திதி நாள் என்பதால் அம்மாவாசையன்று நகைகளை வாங்குவதை தவிர்க்கவும். அமாவாசை அன்று ‌தங்கம் வாங்கினால் அது சேராமல் போகக் கூட வாய்ப்புகள் ‌உள்ளன.

தங்கம் வாங்க உகந்த நட்சத்திரம்

தங்க நகை வாங்கவும், அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை என நம்பப்படுகிறது. அஸ்வினி, ரோகிணி மிருகசீரிடம், பூசம், அஸ்தம் சித்திரை, அனுஷம், ரேவதி, ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை. அதேபோல பௌர்ணமி நாட்களும் தங்கம் வாங்க சிறந்த நாட்களாகும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்ந்து வைத்து பாருங்கள்!

-விளம்பரம்-

குளிகை

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது. குளிகை நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.