Home சைவம் ருசியான தட்டைபயிறு வறுவல் இப்படி செய்து பாருங்க! சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு நல்ல அருமையான...

ருசியான தட்டைபயிறு வறுவல் இப்படி செய்து பாருங்க! சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு நல்ல அருமையான காம்பினேஷனாக இருக்கும்!

தட்டைபயிறு இது ஊர்களில் ரொம்ப எளிதாகதாக கிடைக்கக்கூடிய ஒரு வகையான  காய். இந்த காய் இப்போது நகர்ப்புறங்களில் அதிகமாகவே காய்கறி கடைகளில் கிடைக்குது. முதல் முறையாக இந்த தட்டைபயிறு காய்கறி கடைகளை பார்த்த உடனே தட்டைபயிறை வச்சு என்ன பண்ணுவாங்க அப்படின்னு யோசிக்கும்போது தட்டைபயிரில் பொரியல் சாப்பிடுவாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டோம்.

-விளம்பரம்-

இந்த தட்டப்பயிறு நல்ல நீளமாக வளரக்கூடிய ஒரு பயறு வகையை சேர்ந்த அதாவது இது ஊர் புறங்களில் சாட்டை பயத்தங்காய் அப்படின்னு சொல்லுவாங்க இந்த பயித்தங்காயை வயல்களில் வரப்பு பயிரா போட்டு வளர்ப்பாங்க. இது வீட்டு தேவைக்காக எடுத்து சமைச்சு சாப்பிடுவது உண்டு. ஆனால் முதன் முதலாக இதை பொரியல் பண்ணலாம் அப்படினு நகர்ப்புற கடைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

தட்டைபயிறு முதல் முதல்ல கடைகளில் பார்க்கும்போது சரி இதை வாங்கி என்ன சமைக்கலாம் அப்படின்னு பார்த்தேன். அது சாம்பார்ல போட்டு இருப்பாங்க பொரியல் பண்ணி சாப்பிட்டிருக்காங்க இதெல்லாம் பார்த்திருக்கோம்.இப்ப நாம என்ன பண்ண போறோம் அப்படின்னா அந்த தட்டைபயிரில் வறுவல் எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கிறோம்.  இந்த தட்டைபயிரில் இருக்கிற சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துறதுக்கும் உதவுகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் இந்த தட்டைபயிறு பயன்படுது.  சிறுநீரக  கற்களை கரைக்கும் தன்மை கொண்டது தட்டைபயிறு. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் தட்டைபயிறு அதிகமாகவே உணவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் சிறிதளவு தட்டைபயிறு எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது . தட்டைபயிறு சாப்பிடும் பொழுது உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் போன்றவை குணமாகிறது. இப்போது தட்டைபயிறு வறுவல் எப்படி செய்வது என்று  பார்க்கலாம்.

Print
No ratings yet

தட்டைபயிறு வறுவல் | Thattai Payiru Fry Recipe In Tamil

தட்டைபயிறு முதல் முதல்ல கடைகளில் பார்க்கும்போது சரி இதை வாங்கி என்ன சமைக்கலாம் அப்படின்னு பார்த்தேன்.அது சாம்பார்ல போட்டு இருப்பாங்க பொரியல் பண்ணி சாப்பிட்டிருக்காங்க இதெல்லாம் பார்த்திருக்கோம்.இப்பநாம என்ன பண்ண போறோம் அப்படின்னா அந்த தட்டைபயிரில் வறுவல் எப்படி பண்றது அப்படின்னுபார்க்க இருக்கிறோம்.  இந்த தட்டைபயிரில் இருக்கிறசத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துறதுக்கும் உதவுகிறது. தினமும் சிறிதளவு தட்டைபயிறு எடுத்துக் கொள்வது உடலுக்குநன்மையை தருகிறது . தட்டைபயிறு சாப்பிடும் பொழுது உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல்போன்றவை குணமாகிறது. இப்போது தட்டைபயிறு வறுவல் எப்படி செய்வது என்று  பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Thattai payiru Fry
Yield: 4
Calories: 129kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ தட்டை பயிறு
  • 4 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • ஸ்பூன் கடலை பருப்பு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் அடுப்பில் வானெலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் வெறும் வானெலியில் கடலை பருப்பை வறுக்கவும்.
  • வறுத்த கடலைப்பருப்பு,தேங்காய் துருவல், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் பொடியாக்கவும்.
  • பிறகு வானெலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தட்டைபயிறு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் சாம்பார்தூள் சேர்த்து எண்ணெயில் பிரட்டி, உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு மூடி வேக விடவும்.
  • தட்டைபயிறு வெந்து நீர் இல்லாமல் வரும்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் பொடியை தூவி கலந்து நன்றாககிளறி விடவும்.
  • தட்டைபயிறு நன்றாக தேங்காயுடன் கலந்த பின் வேறு தட்டிற்கு மாற்றி பரிமாறினால் சூடான சுவையான தட்டைபயிறுவறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 129kcal | Carbohydrates: 43g | Protein: 12g | Fiber: 4g | Vitamin A: 12IU

இதையும் படியுங்கள் : ருசியான உலர் மொச்சை பிரியாணியை உதிரி உதிரியாக ஒருமுறை செய்து பாருங்களேன்! மொத்த பிரியாணியும் காலியாகும்!

-விளம்பரம்-