மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த ப
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம்.
அந்த வவையில் சுவையான தட்டை பயறு சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊற வைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்.
ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த சுவையான சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான தட்டைபயிறு வறுவல் இப்படி செய்து பாருங்க! சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு நல்ல அருமையான காம்பினேஷனாக இருக்கும்!