வீடே மணக்க மணக்க ருசியான தேங்காய் பால் குஸ்கா இப்படி செஞ்சி கொடுங்க! கொஞ்சம் கூட மிஞ்சாது!

இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் க

By Prem Kumar · 26/2/2024

இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பால் குஸ்கா. தேங்காய்ப்பால் குஸ்கா மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேங்காய்ப்பால் குஸ்கா பாசுமதி அரிசி, தேங்காய் பால், விருப்பமான காய்கறிகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

தேங்காய் பால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரோற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது, குறிப்பாக கோடை காலங்களில். ஈசியாக செய்யக்கூடிய, குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியான இந்த சுவையான தேங்காய்பால் குஸ்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்கும் விதத்தில் குஸ்கா சுலபமாக இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்! பிரியாணி தோற்று விடும்!

Recipes AMP · Quick view
View full