- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பால் குஸ்கா. தேங்காய்ப்பால் குஸ்கா மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேங்காய்ப்பால் குஸ்கா பாசுமதி அரிசி, தேங்காய் பால், விருப்பமான காய்கறிகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
தேங்காய் பால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரோற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது, குறிப்பாக கோடை காலங்களில். ஈசியாக செய்யக்கூடிய, குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியான இந்த சுவையான தேங்காய்பால் குஸ்கா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்கும் விதத்தில் குஸ்கா சுலபமாக இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்! பிரியாணி தோற்று விடும்!
Ingredients
Method
முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாச்சி பூ, மராத்தி மொக்கு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு ஊறவைத்த அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் நெய் விட்டு நன்றாக கிளறி தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை, நெய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் குஸ்கா தயார்.






